தீபாவளி | சென்னையில் நெரிசல்மிகு நேரங்களில் கூடுதல் ரயில்கள்: மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: தீபாவளியை முன்னிட்டு இன்று முதல் 22-ம் தேதி வரை நெரிசல்மிகு நேரங்களில் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையில் 5 நிமிட இடைவெளியில் இயக்கப்படும் ரயில்களின் சேவை இரவு 10 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்: " தீபாவளியை முன்னிட்டு நெரிசல்மிகு நேரங்களில் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை 5 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் சேவைகள் 2022 அக்டோபர் 20, 21 மற்றும் 22-ம் தேதிகளில் மட்டும் இரவு 10 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும் நெரிசல்மிகு நேரங்களில் கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை 5 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் சேவைகள், மேற்குறிப்பிட்டுள்ள மூன்று நாட்கள் மட்டும் 5 நிமிடத்திற்கும் குறைவான இடைவெளியில் இயக்கப்படும்.

எனவே, 2022 அக்டோபர் 20,21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலான நெரிசல்மிகு நேரங்களில் பயணிகள் தங்கள் பயணத்தை திட்டமிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேற்கண்ட கூடுதல் மெட்ரோ ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில் நீட்டிப்பு சேவைகள் அக்.20 (வியாழக்கிழமை), அக்.21 (வெள்ளிக்கிழமை), அக்.22 (சனிக்கிழமை) ஆகிய தேதிகளுக்கு மட்டுமே" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

14 mins ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

மேலும்