சென்னை: தீபாவளி பண்டிகையை ஒட்டி சொந்த ஊர்களுக்குச் செல்வதற்காக அரசுப் பேருந்துகளில் இதுவரை 1 லட்சத்து 51 ஆயிரத்து 111 பேர் முன்பதிவு செய்திருப்பதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
தீபாவளி பண்டிகை வரும் 24-ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் வசிப்பவர்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாட அவர்களது சொந்த ஊர்களுக்குச் செல்வது வழக்கம். இந்த முறை தீபாவளி பண்டிகை திங்கட்கிழமை வருவதாலும், அதற்கு முந்தைய சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்கள் என்பதாலும், சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
தீபாவளி பண்டிகைக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 16 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இந்தப் பேருந்துகளில் பயணிக்க வசதியாக முன்பதிவு செய்யும் நடைமுறைகள் கடந்த செப்டம்பர் 21-ம் தேதியன்று தொடங்கியது.
சொந்த ஊர்களுக்குச் செல்ல அரசுப் பேருந்துகளில் முன்பதிவு செய்திருப்பவர்கள் எண்ணிக்கையை போக்குவரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, இதுவரை 1 லட்சத்து 51 ஆயிரத்து 111 பேர் முன்பதிவு செய்துள்ளனர். சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்ல 61 ஆயிரத்து 949 பேரும், மற்ற ஊர்களில் இருந்து பயணிக்க 89 ஆயிரத்து 168 பேரும் முன்பதிவு செய்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
» மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ அக்.20 - 26
» கான்டாக்ட் லென்ஸ் அணிந்து பட்டாசு வெடிக்க கூடாது: அகர்வால் மருத்துவமனை அறிவுறுத்தல்
முக்கிய செய்திகள்
தமிழகம்
13 mins ago
தமிழகம்
24 mins ago
தமிழகம்
55 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago