அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான வழக்கை ரத்து செய்ய அமலாக்கத் துறை கடும் ஆட்சேபம்

By செய்திப்பிரிவு

சென்னை: அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறிமோசடியில் ஈடுபட்டதாக, அமைச்சர் செந்தில்பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய அமலாக்கத் துறை தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தமிழக மின்துறை அமைச்சராக பதவி வகிக்கும் செந்தில்பாலாஜி, கடந்த 2011-15-க்கு இடைப்பட்ட காலத்தில் அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராகப் பதவி வகித்தார். அப்போது, போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது.

அதையடுத்து அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் அவரது நண்பர்கள் பிரபு, சகாயராஜன், தேவசகாயம், அன்னராஜ் உள்ளிட்டோர் மீது நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல், கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் 3 வழக்குகளைப் பதிவு செய்தனர். இந்த வழக்குகள் மீதான விசாரணை எம்பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. தன் மீதான வழக்குகளை ரத்து செய்யக் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் தாக்கல் செய்திருந்த மனு, நீதிபதி வி.சிவஞானம் முன்பாக விசாரணைக்கு வந்தது.

அப்போது செந்தில்பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் எஸ்.பிரபாகரன், என்.பரணிக்குமார் ஆகியோர் ஆஜராகி, ‘‘இந்த வழக்குகள் அரசியல் ரீதியாக பழிவாங்கும் நோக்குடன் பதிவு செய்யப்பட்டவை என்பதால் இந்த வழக்குகளை ரத்துசெய்ய வேண்டும்’’ என வாதிட்டனர். அதேபோல பாதிக்கப்பட்ட புகார்தாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் ஸ்ரீராம்பஞ்சு, பி.எஸ்.ராமன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.

அப்போது அமலாக்கத் துறை தரப்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ் ஆஜராகி, ‘‘அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலைபெற ரூ.2.5 லட்சம் கொடுத்து ஏமாந்தவர்கள், தற்போது அந்த மோசடி வழக்கை திரும்பப் பெறுகிறோம் எனக்கூறி லட்சக்கணக்கில் செலவு செய்து இந்த வழக்கை நடத்துவது ஆச்சரியமளிக்கிறது. இந்த வழக்குகளை ஒருபோதும் ரத்து செய்யக் கூடாது என கடுமையாக ஆட்சேபம் தெரிவித்தார். இரு தரப்பிலும் வாதங்கள் நிறைவடையாத நிலையில் இந்த வழக்கு விசாரணையை அக்.28-ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

40 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்