மதுரையில் திமுக மாவட்டச் செயலாளர்களிடையே நடந்த மோதல் சம்பவம் குறித்து கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நேற்று நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தினார்.
மதுரை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பி.மூர்த்தி, மதுரை நகர் தெற்கு மாவட்டச் செயலாளர் கோ.தளபதி. மதுரை புறநகரிலுள்ள 28 வார்டுகள் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டன. இந்த பகுதிகள் திமுகவில் நிர்வாக ரீதியாக புறநகர் நிர்வாகிகளிடமே உள்ளது. இங்கு நிர்வாகிகள் நியமனம், கட்சி பணி மேற்கொள்வதில் மாவட்டச் செயலாளர்களான தளபதி, மூர்த்தி ஆகியோரிடையே மனக்கசப்பு உருவானது. காலப்போக்கில் வளர்ந்து ஒருவரை ஒருவர் கட்சி தலைமையிடம் புகார் அளித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் திருப்பரங்குன்றம் தொகுதியில் திமுக வேட்பாளர் பா.சரவணன் மனுத்தாக்கல் செய்தார். இதில் பங்கேற்ற தளபதி, மூர்த்தி ஆகியோரது ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட்டது.
இப்பிரச்சினை குறித்து கட்சி பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு உடனே தகவல் அளிக்கப்பட்டது. ஸ்டாலின் உத்தரவின் பேரில் எம்எல்ஏ ஒருவர் மோதலின் பின்னணி குறித்து முழுமையாக விசாரித்தார். இந்நிலையில், நேற்று மதுரை சுற்றுச்சாலையிலுள்ள ஒரு ஓட்டலில் இடைத்தேர்தல் பணி குறித்து திமுக வழக்கறிஞர் அணி கூட்டம், தென் மாவட்ட செயலர்கள் கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி மதுரை மோதல் சம்பவம் குறித்து திமுக நிர்வாகிகளிடம் விசாரித்தார்.
இது குறித்து கட்சி நிர்வாகி ஒருவர் கூறியது: மூர்த்தியின் சில செயல்பாடுகளை தளபதி, முன்னாள் அமைச்சர் ஒருவர் உள்ளிட்ட சிலர் தொடர்ந்து குறைகூறி வந்தனர். இது குறித்து கட்சி தலைமைக்கு புகாராக அளிக்கும்படி மேலிடத்திற்கு நெருக்கமான எம்எல்ஏ ஒருவரிடம் தெரிவித்தனர். இதற்கு எம்எல்ஏ உடன்படாததுடன், இது குறித்து மூர்த்தியிடமே நேரடியாக கேட்கலாம் என தெரிவித்துள்ளார்.
இதை ஏற்காத தளபதி தரப்பினர் மூர்த்தியின் அனைத்து செயல்பாடுகளை தொடர்ந்து விமர்சித்து வந்தனர். இந்நிலையில் தளபதி ஆதரவாளரே திருப்பரங் குன்றம் இடைத்தேர்தல் வேட்பா ளரானார். இதில், ஐ.பெரியசாமி தலை யீட்டதால் மூர்த்தி எதிர்ப்பு காட்டவில்லை. வேட்பாளருக்கு தேவையில்லாத செலவுகளை வைப்பதாக மூர்த்தி மீது தளபதி குற்றம் சாட்டினர். கடந்த அக்.30-ல் வலையங்குளத்தில் ஸ்டாலின் பங்கேற்ற கட்சி கூட்டத்தை திருப்பரங்குன்றத்திலுள்ள ஒரு மகாலில் நடத்தினால் செலவு குறைந்திருக்கும் என்றார். ஆனால், வலையங்குளத்தில் கூட்டம் நடத்தியதுடன், அதிகளவில் கூட்டத்தை கூட்டி ஸ்டாலின் பாராட்டை மூர்த்தி பெற்றது தளபதி தரப்பிற்கு மேலும் கோபத்தை உண்டாக்கியது.
இதன் பின்னணியிலேயே வேட்பாளரிடம் மூர்த்தி பணத்தை வாங்கிக் கொண்டுதான் சீட் கிடைக்கச் செய்தார் என அடுத்த புகாரை தெரிவித்தனர். இது மூர்த்திக்கு கடும் ஆத்திரத்தை உண்டாக்கியது. இப்படி செய்தால் மூர்த்தி பிரச்சினையை இழுப்பார் என திட்டமிட்டே குற்றஞ்சாட்டியதும், அதன்படியே மூர்த்தி நடந்து கொண்டதால் பொது இடத்தில் மோதல் சம்பவம் நடந்ததும் தெரிந்தது. மூர்த்திக்கு வேண்டாத பலரும் தளபதியை பகடைக்காயாக பயன் படுத்துகின்றனர்.
மூர்த்தி தன்னிடம் பணம் எதுவும் கேட் கவில்லை என வேட்பாளரே தெரிவித்துவிட்ட நிலையில், தளபதி உள்நோக்கத்துடனேயே மூர்த்தி மீது குற்றம் சாட்டியிருப்பதாகவும் பாரதியிடம் தெரிவிக்கப்பட்டது. தளபதியும் தனது தரப்பு நியாயத்தை தெரிவித்துள்ளார். இந்த மோதல் சம்பவம் திமுகவினரிடம் தொடர்ந்து விவாதத்தை கிளப்பி வருகிறது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
27 mins ago
தமிழகம்
41 mins ago
தமிழகம்
47 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago