இலங்கை மன்னார் மாவட்ட மீனவர்களிடம் திருடப்பட்ட வலைகளை மண்டபம் கடலோரக் காவல் குழும காவல்துறையினர் ராமேசுவரம் அருகே மீட்டுள்ளனர்.
500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாததால் ஏற்பட்ட பணத் தட்டுப்பாடு பிரச்சினையால் விசைப்படகு மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. ஆனாலும் ராமேசுவரம், பாம்பன் நாட்டுப் படகு மீனவர்கள் தொழில் செய்து வருகின்றனர்.
இதனால் இலங்கை கடற்பரப்பில் ராமேசுவரம் நாட்டுப் படகு மீன்பிடிப் படகுகளின் வருகை அதிகரித்துள்ளதாகவும், மேலும் நடுக்கடலில் மீன்களுக்காக விரிக்கப்பட்ட மன்னார் மாவட்ட நாட்டுப் படகு மீனவர்களின் 30 லட்சம் ரூபாய் பெறுமதியான வலைகளையும் பாம்பன் நாட்டுப்படகு மீனவர்கள் திருடிச் சென்று விட்டதாக 14 புகார்கள் மன்னார் மாவட்ட காவல்நிலையத்தில் கடந்த வாரம் பதிவு செய்யப்பட்டது.
மேலும் பாம்பன் நாட்டுப்படகு மீனவர்களால் திருடப்பட்ட வலைகளை மீட்க வலியுறுத்தி மன்னார் மாவட்ட மீனவர்கள் இரண்டு நாட்கள் வேலை நிறுத்தப் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை மாலை ராமேசுவரம் அருகே பாம்பன் குந்துகால் கடற்கரைப் பகுதியில் மண்டபம் கடலோரக் காவல் குழும காவலர்கள் ரோந்தில் ஈடுபட்டிருந்தபோது கடற்கரையில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மீன்பிடி வலைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை மீட்டு விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அந்த வலைகள் இலங்கை மன்னார் மாவட்ட மீனவர்களின் வலைகள் என தெரியவந்தது. வலைகளை சுங்கத்துறையினரிடம் ஒப்படைத்துள்ள மண்டபம் கடலோரக் காவல் குழும காவலல்துறையினர் வலைகளை திருடும் கும்பலையும் தேடி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
27 mins ago
தமிழகம்
42 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago