சென்னை: மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியலில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 % இட ஒதுக்கீட்டில் ஈரோட்டை சேர்ந்த மாணவி முதலிடம் பிடித்துள்ளார்.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் போன்ற மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (அக்.17) வெளியிட்டார். இதில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் 454 எம்பிபிஎஸ், 104 பிடிஎஸ் என மொத்தம் 558 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான தரவரிசை பட்டியலில் ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவி, தேவதர்ஷினி 518 மதிப் பெண்களுடன் முதல் இடத்தையும், சென்னை, குரோம் பேட்டை அரசு ஆண்டுகள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவன் சுந்தர்ராஜன் 503 மதிப் பெண்களுடன் 2வது இடத்தையும், வேலூர், உசூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவன் பிரவீன் குமார் 481 மதிப் பெண்களுடன் 3வது இடத்தையும், விழுப்புரம் வளவனூர் எஸ்.ஆர். அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவி பிருந்தா 467 மதிப் பெண்களுடன் 4வது இடத்தையும், ஈரோடு, பங்களாபுதூர் அரசு மேல் நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவன் ராகுல் 466 மதிப் பெண்களுடன் 5 வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
மேலும் திருவள்ளூர், அம்மையார் குப்பம், ஏ.எம்.கே. அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவி சத்யா 463 மதிப்பெண்களுடன் 6வது இடத்தையும், சேலம், ஓமலூர், கராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவர் ராஜ்குமார், 455 மதிப்பெண்களுடன் 7து இடத்திலும், சேலம், கொங்கனபுரம், மாதிரி பள்ளியைச் சேர்ந்த மாணவன் சிவகுமார் 446 மதிபெண்களுடன் 8வது இடத்தையும், சேலம், ராமமூர்த்தி நகர், அரசு மேல் நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவி பவித்ரா 444 மதிப்பெண்களுடன் 9வது இடத்தையும். திருவண்ணாமலை, செய்யாறு அரசு ஆண்டுகள் மேல் நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவன் தாசபிரகாசம் 439 மதிப்பெண்களுடன் 10 வது இடத்தை பிடித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
15 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
10 hours ago