பிரதமரின் கருத்துகள் நடைமுறைக்கு வந்தால் நீதித் துறையில் முன்னேற்றம் ஏற்படும்: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நம்பிக்கை

By செய்திப்பிரிவு

சென்னை: பிரதமர் மோடி கூறிய கருத்துகள் நடைமுறைக்கு வந்தால், நீதித் துறையில் முன்னேற்றம் ஏற்படும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: நீதிமன்றங்களில் அந்தந்த மாநிலங்களின் தாய்மொழியைப் பயன்படுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியிருப்பது வரவேற்கதக்கது. இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்னர் ஆங்கிலேயர்களால் கொண்டுவரப்பட்ட பல்வேறு சட்டங்கள் இன்றும் இந்தியாவில் நடைமுறையில் இருக்கின்றன. அவற்றை காலத்தின் வளர்ச்சிற்கு ஏற்ப, மாற்றத்துக்கு ஏற்ப திருத்தம் செய்ய வேண்டும். மேலும், சில வெளிநாடுகளில் ஒரு சட்டம் இயற்றும்போதே, அதுஎத்தனை ஆண்டுகள் நடைமுறையில் இருக்கும் என்றும் முடிவு செய்துவிடுகிறார்கள். அதே பாணியை இந்தியாவிலும் பின்பற்றலாம் என்று பிரமதர் கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும், சட்டப்படிப்புகளை தாய்மொழியில்தான் படிக்க வேண்டும். அதற்கு, சட்டப்படிப்பை தாய்மொழியில் உருவாக்க வேண்டும் என்றும் அவர் கூறியிப்பது மிகுந்த பாராட்டுக்குரியது. இதனால் அதிகம் பேர் சட்டம் படிப்பதற்கான வாய்ப்பு ஏற்படும். பிரதமர் மோடியின் கருத்துகள் நடைமுறைக்கு வந்தால், நீதித் துறையில் பல்வேறு மாற்றங்களும், முன்னேற்றங்களும் ஏற்படும். இவை அனைத்தும் நாட்டுக்கும், மக்களுக்கும் பயனுள்ளதாக அமையும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. பிரதமரின் கருத்துகளை தமாகா முழு மனதுடன்வரவேற்கிறது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 secs ago

தமிழகம்

14 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்