இந்தி திணிப்பை கைவிட வேண்டும்: மார்க்சிஸ்ட் மாநில செயற்குழு தீர்மானம்

By செய்திப்பிரிவு

சென்னை: இந்தி திணிப்பை மத்திய அரசு கைவிட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் சென்னை தியாகராய நகரில் உள்ள அக்கட்சியின் மாநில தலைமை அலுவலகத்தில் நடந்தது. இக்கூட்டத்துக்கு சு.வெங்கடேசன் எம்.பி. தலைமை தாங்கினார். கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்கள் பிரகாஷ் காரத், ஜி.ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்: இந்தி, சம்ஸ்கிருத திணிப்புக்கு வகை செய்யும் முறையில் உருவாக்கப்பட்டுள்ள புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் அனைத்து படிப்புகளுக்கும் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வுகள் அனைத்தும் இந்தியில் மட்டுமே நடத்தப்படும் சூழல் உருவாக்கப்படுகிறது. குடியரசுத் தலைவரிடம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான அலுவல் மொழிக்கான நாடாளுமன்ற நிலைக்குழு 112 பரிந்துரைகளை வழங்கியுள்ளது. இதில் பெரும்பாலான பரிந்துரைகள் இந்தியை திணிக்கும் முயற்சியாகவே உள்ளது.

இந்தி திணிப்புக்கு எதிராக தமிழகம் மட்டுமின்றி, கேரளா, மேற்கு வங்கம், தெலங்கானா, கர்நாடகாவிலும் போராட்டங்கள் வெடித்துள்ளன. பாஜகவின் ஒற்றை மொழி திணிப்பை இந்தியாஏற்காது என்பதையே இது காட்டுகிறது. அனைத்து படிப்புகளுக்கும் பொது நுழைவுத் தேர்வை புகுத்துவது அப்பட்டமான அநீதி. 20 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்ப மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (SSC) அறிவிக்கை வெளியிட்டுள்ளது. இத்தேர்வுக்கான கேள்வித் தாள்களில் இந்தி, ஆங்கிலம் மட்டுமே இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது, இந்தி பேசாத மாநிலங்களின் மாணவர்களுக்கு இழைக்கும் மாபெரும் அநீதி.மத்திய அரசின் இந்த நடவடிக்கைகளை கடுமையாக கண்டிக்கிறோம்.

அலுவல் மொழி: நாட்டின் அமைதி, ஒற்றுமையை சீர்குலைக்கும் இந்தி திணிப்பை மத்திய அரசு கைவிட வேண்டும், அரசியல் சாசனத்தின் 8-வது அட்டவணையில் உள்ள தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளையும் மத்திய அலுவல் மொழியாக அறிவிக்க வேண்டும். மருத்துவம் உள்ளிட்ட அனைத்து படிப்புகளுக்கும் பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும். மத்திய தேர்வாணைய வினாத் தாளில் மாநில மொழிகளும் இடம்பெற வேண்டும். மத்திய அரசின் இந்தி திணிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக ஜனநாயக அமைப்புகள், பொதுமக்கள் போராட முன்வர வேண்டும். இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

24 mins ago

தமிழகம்

33 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்