தொடர் மழையால் விளைச்சல் பாதிப்பு: மதுரையில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.90-க்கு விற்பனை

By செய்திப்பிரிவு

தொடர் மழையால் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மதுரையில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.90-க்கு விற்பனையாகி வருகிறது.

தொடர் மழை காரணமாக காய்கறி பயிர்கள் பாதிப்படைந் தன. இதனால் விளைச்சல் குறைந்துவிட்டது. சந்தைகளுக்கு காய்கறி வரத்து குறைந்ததால் விலை அதிகரித்து வருகிறது.

மதுரை மாட்டுத்தாவணியில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த காய்கறி மார்க்கெட்டில் கேரட் கிலோ ரூ.70, பீன்ஸ் ரூ.100, பீட்ரூட் ரூ.40 முதல் ரூ.60, சிறிய பாகற்காய் ரூ.180, முட்டைக்கோஸ் ரூ.40, தக்காளி ரூ.35, சின்ன வெங்காயம் கிலோ ரூ.90 என்ற விலைக்கு விற்பனையானது.

இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘‘தொடர் மழை பெய்வதால் தமிழகத்தில் சின்ன வெங்காயம் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற நேரங்களில் கர்நாடகா அல்லது வடமாநிலங்களில் இருந்து வெங்காயத்தை வாங்கி விற்பனை செய்வோம். ஆனால், தற்போது அங்கும் தொடர் மழை பெய்கிறது. அங்கு உற்பத்தியாகும் வெங்காயம் அவர்களுக்கே போதுமானதாக உள்ளது.

இதனால் தமிழகத்தில் உற்பத்தியாகும் வெங்காயத்தை மட்டுமே விற்பனை செய்து வருகிறோம். கடந்த சில நாட்களாக சின்ன வெங்காயம் கிலோ ரூ.90 என்ற விலையிலேயே விற்பனையாகி வருகிறது என்று கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE