வெளிநாட்டில் கல்வி; ஒரே ஆண்டில் 9 பேர் தேர்வு: ‘இந்து தமிழ் திசை’ செய்தியால் சாத்தியமான ஏழை மாணவர்கள் கனவு

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: தமிழகத்தில் முதல் முறையாக ஒரே ஆண்டில் 9 தலித் மாணவர்கள், உதவித் தொகை அடிப்படையில் லன்டன், கொரியா போன்ற வெளிநாடுகளில் பிஎச்டி படிப்பிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கு முன்பு 10 ஆண்டுகளில் வெறும் 3 பேர் மட்டுமே பயன்பெற்றிருந்த இத்திட்டத்தின் அலட்சியத்தை ஆர்டிஐ மூலம் வெளி வந்த தகவலை தமிழ் இந்து செய்தி அம்பலப்படுத்தியதின் எதிரொலியாக சாத்தியமாகி உள்ளது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் வெளிநாடுகளில் உள்ள புகழ்பெற்ற பல்லைக்கழகங்களில் கல்வி உதவித்தொகை மூலம் பொறியியல் தொழில்நுட்பவியல், அறிவியல் பாடப்பிரிவுகளில் முதுகலைப்பட்டப்படிப்புகளை படிக்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. இந்த ஆதிதிராவிடர் மற்றுமு் பழங்குடியினர் கல்வி உதவித்தொகை திட்டத்தில் கடந்த 2012-2013 முதல் 2019-2020 நிதியாண்டு வரையிலான 8 ஆண்டுகளில் வெறும் 18 பேர் மட்டுமே விண்ணப்பித்தனர்.

அதில் வெறும் 3 மாணவர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டு பயன்பெற்றிருந்தனர். இந்த படிப்பு திட்டத்திற்காக கடந்த 8 ஆண்டுகளில் ரூ.2,65,83,000 நிதி ஒதுக்கியுள்ளதாகவும், அதில் வெறும் ரூ.1,66,79,000 வரை மட்டுமே நிதி பயன்படுத்தியுள்ளாகவும், மீதி ரூ.99,04,000 பயன்படுத்தப்படவில்லை என்றும் தகவல் பெறும் உரிமைச்சட்டத்தின் மூலம் மதுரையை சேர்ந்த ஆர்டிஐ ஆர்வலர் கார்த்திக் வெளிப்படுத்திய தகவலின் அடிப்படையில் கடந்த 6.9.2020 இந்து தமிழ் செய்தி வெளியிட்டு இருந்தது.

இந்த செய்தியின் அடிப்படையில் கார்த்திக் ஆதிதிராவிடர் நலத்துறைக்கு புகார் மனு அனுப்பியதோடு மதுரை உயர் நீதிமன்றத்திலும் பொதுநல வழக்கும் தொடர்ந்திருந்தார். இதன் எதிரொலியாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்தவம் மதம் மாறிய ஆதிதிராவிடர் இன மாணக்கர்களுக்கு அயல்நாடு சென்று உயர்கல்வி பயில்வோருக்கான கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் மறுசீரமைக்கப்பட்டது. மேலும், அதுதொடர்பான தகுதித்தேர்வு நடத்துவதற்கு 500 மாணாக்கர்களுக்கு ஆண்டிற்கு ரூ.1.64 கோடி செலவில் பயிற்சி வழங்கவும், மாணாக்கர்கள் தாம் விரும்பும் நாட்டின் கல்வி நிறுவனத்தின் மேல் படிப்பினை தொடர்வதற்கு கல்வி உதவித்தொகை சுமார் ரூ.36 லட்சம் வீதம் பத்து மாணாக்கர்களுக்கு ரூ.3.60 கோடி செலவினத்தில் அயல்நாடு சென்று கல்வி படிக்க உதவித் தொகை வழங்கும் திட்டம் மேலும் விரிவுப்படுத்தப்பட்டு மொத்தம் ரூ.5.24 கோடிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதன்படி கடந்த ஆகஸ்ட் 8ம் தேதி வரை விண்ணப்பித்திருந்த 24 மாணாக்கர்களில் 9 மாணாக்கர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்க இத்திட்ட தேர்வுக் குழுவால் பரிந்துரை செய்யப்பட்டதில் 9 மாணாக்கர்களும் தற்போது வெளிநாடுகளில் படிக்க தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதற்காக ஆதிதிராவிடர் நலத்துறை முதற்கட்டமாக தற்போது ரூ.1,99,33,542 நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதன் மூலம் லண்டன், கொரிய உள்ளிட்ட நாடுகளில் உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கலகங்களில் இந்த மாணவர்கள் படிக்க தேர்வாகியுள்ளனர். தமிழக வரலாற்றில் ஆதிதிராவிடர் நலத்துறையின் ஏற்பாட்டில் இவ்வளவு மாணவர்கள் ஒரே ஆண்டில் வெளிநாடுகளுக்கு படிக்க அரசு செலவில் தேர்வாகியிருப்பது இதுவே முதல்முறையாகவும். தொடர்ந்து வரும் ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்து ஆண்டுக்கு நூறு மாணவர்கள் அரசு செலவில் வெளிநாடுகளில் படிக்கச் செல்வார்கள் என்ற நம்பிக்கை தெரிவித்தார் ஆர்டிஐ ஆர்வலர் கார்த்திக்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

27 mins ago

தமிழகம்

41 mins ago

தமிழகம்

47 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்