நெல்லையில் இருந்து மதுரை வழியே பிஹாருக்கு தீபாவளி சிறப்பு ரயில்

By செய்திப்பிரிவு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருநெல்வேலியில் இருந்து பிஹார் மாநிலம் தானாப்பூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. மதுரை ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக திருநெல்வேலியில் இருந்து பிஹார் மாநிலம் தானாப்பூர் ரயில் நிலையத்துக்கு ஒரு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

இந்த ரயில் (06190) அக்டோபர் 18, 25 ஆகிய தேதிகளில் (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 3 மணிக்குப் புறப்பட்டு வியாழக்கிழமைகளில் பிற்பகல் 2.30 மணிக்கு தானப்பூர் சென்றடையும்.

மறு மார்க்கத்தில் தானாப்பூரில் இருந்து சிறப்பு ரயில் (06189) அக்டோபர் 21-ம் தேதி மாலை 6.50 மணிக்குப் புறப்பட்டு திங்கட்கிழமை அதிகாலை 4.20 மணிக்கு திருநெல்வேலி வந்து சேரும்.

தானாப்பூர் செல்லும் சிறப்பு ரயில் கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழநி, பொள்ளாச்சி, போத்தனூர், கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர், கூடூர், நெல்லூர், கவாலி, ஓங்கோல், சிராலா, பாபட்லா, தெனாலி,

விஜயவாடா, குடிவாடா, கல்கலூர், பீமாவரம் நகர், தனுகு, நீடாவாலு, ராஜமுந்திரி, சாமல்கோர்ட், துனி, அனகாபள்ளி, துவாடா, விஜயநகரம், பொப்பிலி, பார்வதிபுரம், ராயகடா, முனியகுடா, கேசிங்கா, டிட்லகார், பாலங்கீர், பர்கர் ரோடு, சம்பல்பூர், ஜர்சுகுடா, ரூர்கேலா, சக்கரத்தார்பூர், பருலியா,

ஜோய்ச்சண்டிபகர், அசன்சால், சித்தரஞ்சன், மதுப்பூர், ஜசித், ஜாஜா, கியூல், மொகமெக், பக்தியார்பூர் பாட்னா ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

தானாப்பூரில் இருந்து திருநெல்வேலி வரும் ரயில் கோயம்புத்தூர், போத்தனூர், பொள்ளாச்சி, பழநி, ஒட்டன்சத்திரம் வழியாக இயக்கப்பட மாட்டாது. சேலம், ஈரோடு, கரூர், திண்டுக்கல், மதுரை வழியாக இயக்கப்படும்.

இந்த ரயில்களில் 2 குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 4 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 12 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், ஒரு இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டி, ஒரு மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு பெட்டி ஆகியவை இணைக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

தமிழகம்

8 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

50 mins ago

தமிழகம்

54 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

20 hours ago

மேலும்