‘தி இந்து’ செய்தி எதிரொலி - உழவர் சந்தையில் இயற்கை காய்கறி கடைகள்: தமிழகத்தில் முதன்முறையாக வேளாண் துறை நடவடிக்கை

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

‘தி இந்து’ செய்தி எதிரொலியாக, மதுரை மாவட்டத்தில் இயற்கை காய்கறிகளை விற்க, உழவர் சந்தையில் தலா 5 கடைகளை ஒதுக்க வேளாண் விற்பனைக் குழு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

மதுரை, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி மற்றும் திரு நெல்வேலி மாவட்டங்களில் விளைவிக்கப்படும் காய்கறிகள், பெருமளவு கேரளாவுக்கு அனுப்பப்படுகின்றன. தற்போது இந்த காய்கறிகளில் அதிகளவு ரசாயனக் கலப்பு இருப்பதாக கூறப்படும் தகவலால் கேரளாவில் வரவே ற்பில்லை. அம்மாநிலத்தில் இயற்கை முறையில் விளைவி க்கப்படும் காய்கறிகள், பழங் களுக்கு முக்கியத்துவம் கொடு த்து, அவற்றை அம்மாநில விவசாயிகள், மக்களே உற்பத்தி செய்ய மானிய உதவிகள் வழங்கி ஊக்குவிக்கப்படுகிறது.

இதையடுத்து, தமிழக விவ சாயிகளும் தற்போது இயற்கை முறையில் காய்கறிகள், பழங்களை உற்பத்தி செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். அதனால், தமிழகத்தில் 42 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் இயற்கை முறையில் விவசாயிகள் காய்கறிகள், பழங்கள் உற்பத்தி செய்ய தொடங்கியுள்ளனர்.

ஆனால், அதற்கான சந்தை வாய்ப்பு இல்லை. வியாபாரிகள் வழக்கமான காய்கறிகளை போல குறைந்த விலைக்கே கேட்பதாக, இயற்கை விவசாயிகள் வேதனை தெரிவிப்பது குறித்து ‘தி இந்து’வில் நவ. 14 ம் தேதி விரிவான செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து, மதுரை மாவட்ட வேளாண் விற்பனைக் குழு அதிகாரிகள், இயற்கை விவசாயிகளை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினர். முதற் கட்டமாக மதுரை மாவட்ட உழவர் சந்தைகளில் தலா 5 கடைகளை இயற்கை விவசாயி களுக்கு ஒதுக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு இயற்கை காய்கறிகள் உற்பத்தி மற்றும் விற்பனையாளர்கள் சங்கத் தலைவர் சுப்பையா கூறி யது:

மதுரை அண்ணாநகர், சொக்கி குளம் உழவர் சந்தையில் 5 கடைகள் ஒதுக்குவதாக அதிகா ரிகள் உறுதி அளித்துள்ளனர். காய்கறிகளை கொள்முதல் செய்வதற்கு 3 இடங்களை ஒதுக்கி தருவதாக கூறியுள்ளனர். இதற்கு இருக்கும் வரவேற்பை பார்த்துவிட்டு தொடர்ந்து மற்ற காய்கறி சந்தைகளிலும் இயற்கை காய்கறிளை விற்க கடைகள் ஒதுக்க ஆட்சியர் மூலம் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த நடவடிக்கை மதுரையோடு நின்று விடாமல், மற்ற மாவட்டங்களிலும் தொடர வேண்டும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

15 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்