சென்னை: கொளத்தூர் உட்பட 234 தொகுதிகளிலும் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்த வேண்டும் என்று தொழிலாளர் நலத்துறை அமைச்சரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்தார்.
300-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கு பெற்ற இளைஞர்களுக்கான தனியார் வேலைவாய்ப்பு முகாம் சென்னையில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு வேலைவாய்ப்பு முகாமை தொடங்கி வைத்து 1 லட்சமாவது நபருக்கு பணி ஆணையை வழங்கினார்.
இதன்பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், "என் தொகுதியில் இதுபோன்ற வேலைவாய்ப்பு முகாம்களை நடத்த வேண்டும். அமைச்சர் சேகர்பாபு தொகுதியிலும் நடத்த வேண்டும். இந்த 2 தொகுதிகளில் மட்டுமல்லாமல் 234 தொகுதிகளிலும் இதுபோன்ற முகாம்களை நடத்த வேண்டும் என்பதுதான் நான் வைக்கக் கூடிய வேண்டுகோள்.
உங்களின் தகுதிக்கு ஏற்ற வேலை உங்களுக்கு கிடைக்கும். அதற்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வேலைவாய்ப்பு முகாமை தொடங்கிவைக்க மட்டுமல்லாமல் ஒரு லட்சமாவது பணி ஆணையை வழங்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. இதை விட ஓர் அரசை நடத்தும் முதல்வருக்கு வேறு என்ன மகிழ்ச்சி இருக்க போகிறது" என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
13 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago