கடலில் பேனா வைக்க நிதி உள்ளபோது ஊழியர்களின் போனஸில் கைவைக்கலாமா? - டிடிவி தினகரன்

By செய்திப்பிரிவு

சென்னை: கடலுக்குள் பேனா வைக்க திமுக அரசிடம் நிதி இருக்கும்போது, கடமையைச் செய்யும் அரசு ஊழியர்களின் உரிமையான தீபாவளி போனஸில் கை வைப்பது எந்த வகையில் நியாயமாகும்?" என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களின் ஊழியர்களுக்கு 10 சதவீதம் மட்டுமே தீபாவளி போனஸ் வழங்கப்பட்டிருப்பது ஏற்புடையதல்ல.

கரோனாவைக் காரணம் காட்டி இந்த ஆண்டும் இத்தகைய முடிவை திமுக அரசு எடுத்திருப்பது கண்டனத்திற்குரியது. கடலுக்குள் பேனா வைக்க திமுக அரசிடம் நிதி இருக்கும்போது, கடமையைச் செய்யும் அரசு ஊழியர்களின் உரிமையான தீபாவளி போனஸில் கை வைப்பது எந்த வகையில் நியாயமாகும்? " என்று அவர் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் 'சி' மற்றும் 'டி' பிரிவு ஊழியர்களுக்கு தீபாவளி பண்டிகையையொட்டி தமிழக அரசு 10 சதவீத போனஸ் அறிவித்து நேற்று அரசாணை வெளியிட்டது. அதாவது, 8.33 சதவீத போனஸ் மற்றும் 1.67 சதவீதம் கருணைத் தொகை உள்பட 10 சதவீத போனஸ் வழங்குவது தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

29 mins ago

தமிழகம்

11 mins ago

தமிழகம்

53 mins ago

தமிழகம்

13 mins ago

தமிழகம்

39 mins ago

தமிழகம்

41 mins ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்