12 ஆம் வகுப்பு முடித்து உயர் கல்வியில் சேராத 6718 மாணவர்கள் 

By செய்திப்பிரிவு

சென்னை: 12 ஆம் வகுப்பு முடித்த 6,718 மாணவ, மாணவிகள் பல்வேறு காரணங்களால் உயர் கல்வியில் சேரவில்லை என்பது தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் கடந்த கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பு முடித்த 79,792 மாணவர்கள் உயர்கல்வி சேர்ந்துள்ளார்களாக என்று பள்ளிக் கல்வித் துறை மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் 8588 மாணவர்கள் எந்தவித உயர் கல்வியிலும் சேரவில்லை என்று தெரியவந்தது.

இந்நிலையில் இவர்களை தனித்தனியாக தொடர்புகொண்டு ஆலோசனை வழங்க பள்ளிக்கல்வித் துறை சார்பில் முடிவு செய்யப்பட்டது. மேலும் இந்த மாணவர்களின் மதிப்பெண் உள்ளிட்ட விவரங்களை அளிக்க வேண்டும் என்று ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்ட இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் கடிதம் எழுதினார்.

இந்த கடிதத்தின் அடிப்படையில் மாணவர்களின் விவரம் சேகரிப்பட்டது. இதில் தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு முடித்த மாணவர்களில் 6,718 பேர் வறுமை, குடும்பச் சூழல், நிதி பற்றாக்குறை, உயர் படிப்பில் சேர ஆர்வமின்மை, தொழில் செய்தல், அருகாமை கல்லூரி இல்லாமை போன்ற காரணங்களால் உயர் கல்வியைத் தொடரவில்லை என்று தெரியவந்துள்ளது.

இந்நிலையில் மாணவர்கள் உயர் கல்வியை தொடங்குவதற்கு ஏதுவாக வரும் 20 ஆம் தேதி அனைத்து மாவட்டங்களில் சிறப்பு முகாம் நடத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

27 mins ago

தமிழகம்

9 mins ago

தமிழகம்

51 mins ago

தமிழகம்

11 mins ago

தமிழகம்

37 mins ago

தமிழகம்

39 mins ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்