சென்னை:ஆரஞ்சு நிற ஆவின் பால் பாக்கெட் தயாரிப்பு நிறுத்தப்படுவதாக வெளியான தகவலையொட்டி, அந்த முடிவுக்கு தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் ஆவின் பால் நிறுவனம் அதிகமாக விற்பனை செய்து வந்த, மக்கள் விரும்பி வாங்கிய, அதிக சத்துமிக்க ஆரஞ்சு நிற ஆவின் பால் பாக்கெட் நிறுத்தப்பட உள்ளதாக அறிகிறேன்.
தீபாவளிக்கு பால் மற்றும் பால் பொருட்களைப் பயன்படுத்தி பலகாரங்கள் தயாரிக்கும் வேளையில், மறைமுகமாகப் பால் விலையை உயர்த்தும் வகையில் ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டை தடை செய்து, சிவப்புநிறத்தை முன்னிறுத்துவதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். அதிலும், கறவை மாடு வைத்து பால் உற்பத்தி செய்து கொண்டிருக்கும் ஏழை, விவசாய மக்களுக்கு கொள்முதல் விலையை உயர்த்திக் கொடுக்காமல், விற்பனை விலையை மட்டும் உயர்த்துவது மக்களுக்குக் கூடுதல் சுமையை ஏற்படுத்தும். தரமற்ற பொங்கல் பரிசு தந்து அதிர்ச்சிக்குள்ளாக்கிய திமுக அரசு, தற்போது தீபாவளிப் பண்டிகைக்கு தமிழக மக்களுக்குத் தந்திருக்கும் பரிசு ஆவின் பால் பாக்கெட் நிறம் மாற்றம் மற்றும் இனிப்பு விலை உயர்வு. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago