புதுச்சேரி | கடந்த காங்கிரஸ் ஆட்சியில் சிறப்புக்கூறு நிதியில் முறைகேடு- சிபிஐ விசாரணைக் கோரும் பாஜக

By செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: கடந்த காங்கிரஸ் ஆட்சியில் சிறப்புக்கூறு நிதியில் முறைகேடு நடந்துள்ளதாகவும், அது தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி மத்திய உள்துறையில் புகார் தரவுள்ளதாகவும் புதுச்சேரி பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதன் தெரிவித்தார்.

புதுச்சேரி பாஜக தலைமை அலுவலகத்தில் பாஜக மாநில தலைவர் சாமிநாதன் செய்தியாளர்களிடம் இன்று கூறியதாவது: ''புதுச்சேரியில் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் பட்டியலின மக்களுக்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதி சரியாக பயன்படுத்தாமல் முறைகேடு செய்துள்ளனர். உதாரணத்துக்கு அரியூரில் உள்ள 146 வீடுகளில் கழிவறை வசதி இல்லை. ஆனால் கழிவறை கட்டியதாக நிதியை பெற்றுள்ளார்கள். பல பகுதிகளில் நீர்தேக்கத்தொட்டி கட்டியுள்ளார்கள். ஆனால், தண்ணீர் இல்லை. 30 ஆண்டுகளாக மனைப்பட்டா கொடுக்காமல் உள்ளார்கள்.

பட்டியலின மக்களுக்கு ஒதுக்கப்பட்ட சிறப்பு கூறு நிதியில் கடந்த காலத்தில் அமைச்சர்கள் முறைகேடு நடந்துள்ளது. இது சம்பந்தமாக உள்துறை அமைச்சகத்திடம் புகார் அளித்து சிபிஐ விசாரணை நடத்தக் கூற உள்ளோம். இம்மாத இறுதியில் புதுவை வரவுள்ள மத்திய அமைச்சர் எல்.முருகனிடமும் புகார் அளிக்கவுள்ளோம். காங்கிரஸ் ஆட்சியில் பட்டியலின மக்களுக்கு ஒதுக்கப்பட்ட சிறப்பு கூறு நிதி வேறு துறைகளுக்கு மாற்றப்பட்டுள்ளது. தற்போது சிறப்பு கூறு நிதியில் பட்டியலின மக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி வேறு எந்த திட்டத்திற்கும் பயன்படுத்தவில்லை.

இந்தியை திணிப்பது பாஜக கொள்கை அல்ல. நான் இந்தி தெரியாதவன்தான். ஆனால் பாஜக மாநிலத்தலைவராக உள்ளேன். புதுச்சேரியில் எந்த இடத்திலும் இந்தி திணிப்பு இல்லை. அனைத்து மொழிகளையும் மதிக்கும் கட்சி பாஜக. மொழி தொடர்பாக திமுக புதுச்சேரியில் நாளை நடத்தும் போராட்டம் தேவையற்றது. திமுகவினர் நடத்தும் சிபிஎஸ்இ பள்ளிகளில் இந்தி இல்லையா-முக்கியமாக பிரதமர் மோடி இந்தியை தாய்மொழியாக கொண்டவர் அல்ல. அனைத்து மொழிகளையும் மதிக்கும் கட்சி பாஜக'' என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

21 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்