சென்னை: நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியின் குழந்தைகள் பிறந்த மருத்துவமனை கண்டறியப்பட்டுள்ளது என்றும், தேவைப்பட்டால் அவர்கள் இருவரும் விசாரணைக்கு அழைக்கப்படுவார்கள் என்றும் மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை எழும்பூர் குடும்ப நல பயிற்சி மையத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “திருநங்கைகள் பாலின மாற்று அறுவைச் சிகிச்சை செய்வதில் தேசிய மருத்துவ ஆணையம் சில விளக்கங்கள் கேட்டு தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அது குறித்து மருத்துவத் துறை வல்லுநர்கள், மருத்துவர்கள் போன்ற குழுவினருடன் ஆலோசித்தும், திருநங்கைகள் அமைப்பினரிடமும் கருத்துகள் கேட்டறிந்து தேசிய மருத்துவ ஆணையத்திற்கு விளக்கம் அளிக்கப்படும்.
நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியினர் எந்த மருத்துவமனையை அணுகி இரட்டைக் குழந்தை பிறந்தது என்பதை மருத்துவத் துறை கண்டறிந்துள்ளது. இதுதொடர்பாக, சுகாதாரத் துறை இணை இயக்குனர் தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைத்து விசாரணை நடைபெற்று வருகிறது. யார் யார் தவறு செய்துள்ளார்கள், இதில் சட்டம் மற்றும் விதிமீறல்களில் ஈடுபட்டு உள்ளார்களா என்பதைக் கண்டறிந்து, ஒரு வார காலத்தில் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கப்படும். தேவைப்பட்டால் இருவரும் விசாரணைக்கு அழைக்கப்படுவார்கள்.
மழைக்காலத்தில் தண்ணீர் தேங்குவததைத் தடுப்பதற்கு தாழ்வான பகுதியில் மருத்துவமனை உள்ளதா என்பதை கண்டறிவது சுகாதாரத் துறை பணி அல்ல. அது பொதுப்பணித் துறையின் பணி. இருந்தாலும், அதைக் கண்டறிய பொதுப்பணி துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்று அமைச்சர் கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
18 mins ago
தமிழகம்
48 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago