மேட்டூர் அணையில் இருந்து 45 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு: டெல்டா மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

சேலம்: மேட்டூர் அணையிலிருந்து 45 ஆயிரம் கனஅடி நீர் காவிரியில் திறக்கப்பட்டுள்ளதால் டெல்டா மாவட்டங்களுக்கு நீர்வளத்துறை மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 28 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர் வரத்து நேற்று விநாடிக்கு 45 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இது 60 ஆயிரம் கனஅடி வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் கூறினர்.

கடந்த ஜூலை 16-ல் மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டிய நிலையில், நேற்று முன்தினம் 2-வது முறையாக முழு கொள்ளளவை எட்டியது. இதையடுத்து அணைக்கு வரும் நீர் முழுவதும் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. 16 கண் மதகுகள் வழியாக விநாடிக்கு 21 ஆயிரத்து 500 கனஅடி, நீர் மின் நிலையங்கள் வழியாக 23 ஆயிரத்து 500 கனஅடி என மொத்தம் 45 ஆயிரம் கனஅடி திறந்து விடப்பட்டுள்ளது.

இதனால், நீர் வளத்துறை மூலம் டெல்டா மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அதிகாரிகள் அறிவுறுத்தியு உள்ளனர். வருவாய், தீயணைப்பு, காவல், நீர் வளம் உள்ளிட்ட துறைகளின் அதிகாரிகள் கரையோர பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். காவிரி ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ, செல்ஃபி எடுக்கவோ கூடாது என வருவாய்த் துறை மூலம் தடை விதிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்