உதகை: நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ளது நஞ்சநாடு கிராமம். இங்கு படுகர் இன மக்கள் அதிகம் வசிக்கின்றனர். இங்குள்ள ஊராட்சிஒன்றிய ஆரம்பப்பள்ளியில்,மாணவர்களை அழைத்து வரவும்,பள்ளி முடிந்து வீடுகளுக்கு அழைத்து சென்றுவிடவும் வாகனம்வாங்கியுள்ளனர். இதனால், அப்பள்ளி பிரபல மடைந்து வருவதோடு, மாணவர்கள்சேர்க்கையும் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து அறக்கட்டளை நிர்வாகி ரவிக்குமார் கூறும்போது, "1922-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்பள்ளியில், கரோனா காலத்தில் வெறும் 17 மாணவர்கள், ஓர் ஆசிரியர் மட்டுமே இருந்தனர். போதிய ஆசிரியர்கள் இல்லாததால், பெற்றோர் தங்களது குழந்தைகளை சேர்க்க முன்வரவில்லை. 100 ஆண்டுகள் பழமையான இப்பள்ளியை மூட இடம் தரக்கூடாது என்று நினைத்து, ‘ நஞ்சுண்டேஸ்வர கல்வி’ என்ற அறக்கட்டளை தொடங்கப்பட்டது. அதன்மூலமாக, நிதி திரட்டி பள்ளி அறைகளை புதுப்பித்து, கழிப்பிடம் கட்டிக் கொடுத்தோம். இதனால், மாணவர்கள் சேர்க்கைஅதிகரித்தது. புதிதாக ஆசிரியர்களை நியமித்து பாடங்களை சிறப்பாக நடத்தினோம்.
இருப்பினும், கிராமப் பகுதி சிறுவர்கள் பள்ளிக்கு வர போக்குவரத்து வசதி கிடையாது. இதையடுத்து, பள்ளிக்கு வாகனம் வாங்க முடிவு செய்து, ரூ.8 லட்சம் நிதி திரட்டி வாகனத்தை வாங்கியுள்ளோம். இதன்மூலமாக, பாகலட்டி, கோழிக்கரை, பாலாடா, கல்லக்கொரை உள்ளிட்ட அருகே உள்ள கிராமங்களிலிருந்து மாணவர்கள் பள்ளிக்கு வர தொடங்கினர். இப்போது, 170 மாணவர்கள் படிக்கின்றனர். பள்ளியின் தரத்தை இன்னும் உயர்த்தி மாணவர்கள்எண்ணிக்கையை அதிகரிப்பதோடு, தமிழகத்திலேயே சிறந்த அரசு பள்ளியாக மாற்ற வேண்டும் என்பது எங்களது லட்சியம்" என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
13 mins ago
தமிழகம்
41 mins ago
தமிழகம்
53 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago