இளையான்குடி: இளையான்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் குவித்து வைக்கப்பட் டிருந்த மணல் மாயமான நிலையில், மீண்டும் அங்கு மணல் கொட்டப்பட்டுள்ளது குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க போலீஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, சாலைக்கிராமம் உள்ளிட்ட பகுதிகளில் சில ஆண்டுகளுக்கு முன்பு போலீஸார் பறிமுதல் செய்த 55 யூனிட் திருட்டு மணலை இளையான்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். பின்னர் அந்த மணலை யாரோ எடுத்துச் சென்றுவிட்டனர்.
இந்நிலையில் சாலைக்கிராமத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ராதாகிருஷ்ணன், "வட்டாட்சியர் அலுவலகத்தில் போலீஸார் ஒப்படைத்த மணலை காணவில்லை" என இளையான்குடி காவல் நிலையத்திலும், சிவகங்கை மாவட்ட எஸ்பி அலுவலகத்திலம் புகார் தெரிவித்தார். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இது தொடர்பாக இளையான்குடியில் உள்ள மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் ராதாகிருஷ்ணன் வழக்குத் தொடர்ந்தார். மணல் காணாமல் போனது குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்த கடந்த மார்ச் 31-ம் தேதி போலீஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து இளையான்குடி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர். இதனிடையே மாயமான மணலில் குறிப்பிட்ட அளவு திடீரென இளையான்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் கொட்டப்பட்டுள்ளது.
வழக்கை திசை திருப்புவதற்காக மீண்டும் மணலை கொட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ராதாகிருஷ்ணன் இளையான்குடி காவல்நிலையம், மாவட்ட எஸ்பியிடம் புகார் கொடுத்தார். அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படாததால், உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், மாயமான மணலை மீண்டும் கொட்டியது தொடர்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இளையான்குடி போலீஸாருக்கு உத்தரவிட்டது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
26 mins ago
தமிழகம்
44 mins ago
தமிழகம்
52 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago