இரண்டரை ஆண்டுகளாக தாமதம்: ஆட்டோக்களில் கட்டண கொள்ளையை தடுக்க ஜிபிஎஸ் டிஜிட்டல் மீட்டர்கள் வழங்கப்படுமா?

By கி.ஜெயப்பிரகாஷ்

தமிழகத்தில் ஓடும் 2 லட்சத்து 30 ஆயிரம் ஆட்டோக்களுக்கும் அரசே கட்டணத்தை நிர்ணயித்து கடந்த 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் 25-ம் தேதி அறிவித்தது. அதன்படி 1.8 கிலோ மீட்டருக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.25 எனவும், கூடுதலாக ஒவ்வொரு கி.மீ.க்கு ரூ.12 செலுத்த வேண்டும் எனவும் அறிவிக்கப் பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது ஜிபிஎஸ் (வாகன நகர்வு கண்காணிப்பு) தொழில்நுட்ப வசதியுடன் கூடிய டிஜிட்டல் மீட்டர்கள் 2014-ம் ஆண்டு பிப்ரவரி 28-ம் தேதிக்குள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

ஆட்டோக்களில் டிஜிட்டல் மீட்டர் பொருத்தினால், பொதுமக்கள் பயணம் செய்யும் தூரம், கட்டணம் விவரம் ஆகியவற்றை துல்லியமாக காட்டும். மேலும், ஒட்டுமொத்த விவரங்களும் ரசீதாக (பிரின்ட் அவுட்) வந்துவிடும். இதை மீறி ஆட்டோ ஓட்டுநர்கள் அதிக கட்டணத்தை வசூலிக்க முடியாது. மேலும், பொதுமக்களிடம் ஆட்டோ ஓட்டுநர்கள் பேரம் பேசி ஓட்டுவதை தடுக்க முடியும். ஆனால், ஆட்டோக்களுக்கான ஜிபிஎஸ் டிஜிட்டல் மீட்டர்கள் இன்னும் வழங்கப்படாமல் இருக்கின்றன. சுமார் இரண்டரை வருடங்களாக தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

இது குறித்து ஆட்டோ தொழிலாளர்கள் சம்மேளன (ஏஐடியூசி) மாநில பொதுச் செய லாளர் சேஷசயனம் கூறும்போது, ‘‘ஆட்டோவுக்கு அரசு புதிய கட்டணம் நிர்ணயம் செய்யும்போது 2014 பிப்ரவரி 28-க்குள் டிஜிட்டல் மீட்டர் வழங்கப்படும் என கூறியது. ஆனால், இதுவரையில் வழங்கப்படவில்லை. தொடக்கத்தில் பெரும்பாலான ஆட்டோ ஓட்டுநர்கள் மீட்டர்படிதான் கட்டணத்தை வசூலித்தனர். பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டே வருவதால் அதற்கு ஏற்றார்போல் கட்டணத்தை உயர்த்தி வசூலிக்கின்றனர்.

மேலும், தமிழகம் முழுவதும் 30 ஆயிரம் அபே வாகனங்களை யும், 10 ஆயிரம் டாடா மேஜிக் வாகனங்களையும் ஆட்டோக் களைப் போல் ஓட்டுகின்றனர். இவற்றை முறைப்படுத்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. மேலும், ஆட்டோ ஓட்டுநர் களுக்கு உடனடியாக இலவசமாக டிஜிட்டல் மீட்டர் வழங்க வேண்டும். இதனால், முறைகேடுகள் தடுக்கப்படும்’’ என்றார்.

அதிகாரிகள் தகவல்

இது தொடர்பாக போக்கு வரத்து ஆணையரக அதிகாரிக ளிடம் கேட்டபோது, ‘‘அரசு நிர்ணயித் துள்ள கட்டணத்தை ஆட்டோ ஓட்டுநர்கள் வசூலிக்கக் கோரி மாதந் தோறும் பல்வேறு இடங்களில் ஆய்வு நடத்தி வருகிறோம். இது தவிர ஏராளமான பணிகள் இருப் பதால், ஆட்டோக்களை முழுமை யாக ஆய்வு செய்ய முடியவில்லை. ஆட்டோக்களுக்கு ஜிபிஎஸ் மீட்டர் கள் வழங்குவதற்கான பணிகளை எல்காட் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. அடுத்த சில மாதங்களில் அவை பொருத்தப்படும் என எதிர்பார்க்கிறோம்’’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

24 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்