ராணுவ சீருடைகள் தயாரிக்க தனியாருக்கு விடப்பட்ட டெண்டரை ரத்து செய்ய வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: அகில இந்திய பாதுகாப்பு ஊழியர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் சி.ஸ்ரீகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஆவடி படைத்துறை உடைத்தொழிற்சாலையில் 62 ஆண்டுகளாக முப்படைகளுக்கும் தேவையான அனைத்து விதமான சீருடைகள், பாதுகாப்பு கவச ஆடைகள், டென்ட், பாராசூட்டுகள் உட்பட ஏராளமான பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. 2021-ம் ஆண்டு இத்தொழிற்சாலை உட்பட 41 பாதுகாப்புத் துறை தொழிற்சாலைகளையும் மத்திய அரசு கார்ப்பரேஷனாக தொழிற்சங்கங்களின் எதிர்ப்பையும் மீறி அமல்படுத்தியது.

சுமார் 11 லட்சம் புதிய ராணுவ சீருடைகள், தனியாரிடம் தாரை வார்க்க டெண்டர் விடப்பட்டுள்ளது.இந்த டெண்டரில் கொடுக்கப்பட்டுள்ள விதிகள் ஒருசில பெரிய தனியார் நிறுவனங்களுக்கு சாதகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது என சந்தேகப்படுகிறோம். இந்த டெண்டர் அறிவிப்பு அவர்களுக்கு மட்டுமே சாதகமாக அமையும். மேற்கண்ட சட்டத்துக்கு புறம்பான டெண்டர் அறிவிப்பை மத்தியஅரசு திரும்பப் பெற வேண்டும். இல்லையெனில், வேலைநிறுத்தம் உள்பட பல்வேறு போராட்டங்களை நடத்த வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுவார்கள் என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE