தமிழகத்தில் பாஜக பின்தங்கி இருப்பது வருத்தமளிக்கிறது: சிவகாசியில் மத்திய இணை அமைச்சர் கருத்து

By செய்திப்பிரிவு

சிவகாசி: சிவகாசியில் விருதுநகர் மேற்கு மாவட்ட பாஜக சார்பில் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி பங்கேற்று பேசியதாவது: பிரதமர் மோடி தனிக்கவனம் செலுத்த குறிப்பிட்டுள்ள 112 மாவட்டங்களில் விருதுநகர் மாவட்டமும் ஒன்று. பாஜக நிர்வாகிகள் மத்திய அரசின் திட்டங்களை கிராமம்தோறும் எடுத்து செல்ல வேண்டும். பாஜகவில் குடும்ப அரசியல் இல்லை. இது ஏழை, எளிய மக்களுக்கான கட்சி. குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே பாஜக ஆட்சிக்கு வந்துள்ளது.

8 ஆண்டுகால பாஜக ஆட்சியில் நாடு வளர்ச்சியை நோக்கி பயணிக்கிறது. நாட்டில் அதிக எம்பிக்கள், எம்எல்ஏக்கள், முதல்வர்களை கொண்டுள்ள பாஜகவுக்கு தமிழகத்தில் உரிய ஆதரவு இல்லாதது வருத்தம் அளிக்கிறது. கட்சியினரின் சேவை மூலம் தமிழகத்தில் பாஜக வளர்ச்சி அடைய வேண்டும். சேவை செய்வதற்காகவே அதிகாரத்தை பெற நினைக்கிறோம்.

மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் மக்களவைத் தேர்தலில் 25 இடங்களில் பாஜக வெற்றிபெறும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். பாஜக மாநில பொதுச்செயலாளர் பொன். பாலகணபதி, விருதுநகர் மேற்கு மாவட்டச் செயலாளர் சுரேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

21 mins ago

தமிழகம்

52 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்