மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானத்தால் 6 பேருக்கு மறுவாழ்வு 

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த தொழிலாளியின் உடல் உறுப்புகள் தானத்தால் 6 பேருக்கு மறுவாழ்வு கிடைத்தது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ராமாபுரம் கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளி சிவலிங்கம் (வயது 42). இவரது மனைவி வீரம்மாள். இவர்களுக்கு 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். கடந்த 6-ம் தேதி இரவு 8 மணியளவில் சிவலிங்கம் வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பிவிட்டு வேலைக்கு செல்லும்போது, ஆரம்பாக்கம் அருகில் நிலை தடுமாறி வாகனத்தில் இருந்து கீழே விழுந்துள்ளார். தலையில் பலத்த காயமடைந்த அவர் எளாவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், நேற்று முன்தினம் அவர் மூளைச்சாவு அடைந்தார்.பின்னர், உறவினர்களின் முழு சம்மதத்துடன் அவரது உடலிலிருந்து எடுக்கப்பட்ட கல்லீரல், இரண்டு சிறுநீரகங்கள், கண்கள், இதய வால்வு ஆகிய உடல் உறுப்புகள் 6 பேருக்கு பொருத்தப்பட்டு மறுவாழ்வு அளிக்கப்பட்டது. தேவையான நோயாளிகளுக்கு தானமாக வழங்கப்பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்