நீங்கள் ஊட்டி, கொடைக்கானல் செல்ல திட்டமிட்டுள்ளீர்களா? அந்த குளிர் அனுபவத்துக்காக நீங்கள் அவ்வளவு தூரம் அலையத் தேவையில்லை. வேலூர், கிருஷ்ணகிரியிலேயே கொடைக்கானல் குளிரை அனுபவிக்கலாம்.
ஆம், வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இரவு நேரங்களில் வழக்கத்துக்கு மாறான அளவு வெப்பநிலை மிக மிக குறைந்து காணப்படுகிறது. ஓசூரில் இரவு நேரத்தில் பதிவான வெப்பம் 12 டிகிரி செல்சியஸ் என்றால் உங்களால் நம்பமுடிகிறதா? அதுவும் நவம்பர் மாதத்திலேயே இவ்வளவு குளிர். வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி பகுதிகளில் கடுமையான குளிர் நிலவுகிறது.
இன்னும் எத்தனை நாட்களுக்கு இந்தக் குளிர்?
தற்போது வட தமிழகத்தின் உள் மாவட்டங்களிலும், மேற்கு தமிழகத்திலும் நிலவும் இந்த குளிர் நிலையானது அடுத்த மூன்று நாட்களுக்கு அதாவது நவம்பர் 13-ம் தேதி வரை நீடிக்கும். வளிமண்டலத்தில் மேகக் கூட்டங்கள் இல்லை. ஈரப்பதமும் மிகமிக குறைவாக இருக்கிறது. அதன் காரணமாகவே இரவு நேரங்களில் குளிர் அதிகமாக இருக்கிறது. 13-ம் தேதிக்குப் பின்னர் நிலைமை மாறும். கிழக்கிலிருந்து வரும் அடுத்த அலைகள் தமிழகத்தை நோக்கி நகரும்போது வானிலை மாறும்.
மீண்டும் மழை எப்போது?
நவம்பர் 13-ம் தேதியிலிருந்து மீண்டும் மழைக்கு வாய்ப்பிருக்கிறது. நவம்பர் மாதத்தில் இரண்டாம் பகுதியில் சென்னைக்கு மழை வாய்ப்பிருக்கிறது. டெல்டா, தூத்துக்குடி, ராமநாதபுரம், தெற்கு தமிழகம், தமிழகத்தின் தென் மாவட்டங்களில் நவம்பர் இரண்டாம் பாதியில் மழைக்கு வாய்ப்பிருக்கிறது. தமிழகத்தின் உள் வட மாவட்டங்களில் நவம்பர் இரண்டாம் பாதியில் அதிக மழைக்கு வாய்ப்பில்லை.
முக்கிய செய்திகள்
தமிழகம்
20 mins ago
தமிழகம்
21 mins ago
தமிழகம்
39 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
53 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
20 hours ago