தமிழக போக்குவரத்துக் கழகத்துக்கு புதிதாக 1,172 பிஎஸ்-6 பேருந்துகள்

By கண்ணன் ஜீவானந்தம்

சென்னை: தமிழக போக்குவரத் துறைக்கு புதிதாக பிஎஸ்-6 ரகத்தை சேர்ந்த 1,172 பேருந்துகள் கொள்முதல் செய்யப்படவுள்ளன.

தமிழகத்தின் 8 போக்குவரத்துக் கழகங்களில் உள்ள காலாவதியான பேருந்துகளை ஈடுசெய்யவும், காற்று மாசுபாட்டை குறைக்கும் பிஎஸ்-6 ரக பேருந்துகளை பயன்படுத்தும் வகையிலும் புதிய பேருந்துகளை கொள்முதல் செய்ய போக்குவரத்துத் துறை முடிவு செய்துள்ளது. இதில் முதல்கட்டமாக 2,213 பேருந்துகள் கொள்முதல் செய்ய டெண்டர் வெளியிடப்பட்டது. இவை அனைத்தும் டீசலில் இயங்கும் தாழ்தள பேருந்துகள் ஆகும்.

இந்நிலையில், மேலும் 1,172 பேருந்துகள் வாங்க போக்குவரத்து துறை முடிவு செய்தது. இதன்படி சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்திற்கு 402, விழுப்பும் கோட்டத்திற்கு 347, சேலம் கோட்டத்திற்கு 303, கோவை கோட்டத்திற்கு 315, கும்பகோணம் கோட்டத்திற்கு 303, மதுரை கோட்டத்திற்கு 251, நெல்லை கோட்டத்திற்கு 50 பேருந்துகள் வாங்கப்படவுள்ளன. ஜெர்மனியின் கேஎஃப்டபிள்யூ வங்கி நிதி உதவியின் கீழ் இந்தப் பேருந்துகள் வாங்கப்பட உள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

தமிழகம்

16 mins ago

தமிழகம்

19 mins ago

தமிழகம்

24 mins ago

தமிழகம்

58 mins ago

தமிழகம்

40 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

42 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்