கடலூர் | வேப்பூர் அருகே மின்சாரம் தாக்கி 3 பேர் உயிரிழப்பு

By ந.முருகவேல்

கள்ளக்குறிச்சி: கடலூர் மாவட்டம் வேப்பூரை அடுத்த சிறுபாக்கத்தில் கொடிக்கம்பியில் துணி உலர வைக்கும்போது மின்சாரம் பாய்ந்து 3 பேர் உயிரிழந்தனர்.

கடலூர் மாவட்டம் வேப்பூரை அடுத்த சிறுப்பாக்கம் கிராமத்தில் ஆறுமகன் மகன் ராமன் (55) மற்றும் அவரது மகன் மணிகண்டன் (30) ஆகியோர் குடும்பத்தினருடன் வசித்து வந்தனர். இந்த நிலையில், நேற்று இரவு மழை பெய்து கொண்டிருந்தபோது தங்களது வீட்டின் மேல் பகுதியில் காய வைத்திருந்த துணியை எடுக்கச் சென்ற ராமன், கொடிக்கம்பியிலிருந்த துணியை எடுக்க முயன்றபோது, மின்கசிவினால் மின்சாரம் பாய்ந்துள்ளது. இதைக்கண்ட அவரது மகன் மணிகண்டன் தந்தையைக் காப்பாற்ற அவரை தொட்டபோது, அவரும் மின்சாரம் பாய்ந்து மயங்கி விழந்துள்ளனர்.

இவர்களின் அலறல் சத்தம் கேட்டு, வீட்டிலிருந்தவர்கள் வந்து மின்சாரத்தைக் துண்டித்து இருவரையும் மீட்டு வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், இருவரும் உயிரிழந்ததாகத் தெரிவித்தனர். இதையடுத்து இருவரது உடலும் பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

உயிரிழந்த ராமன் மற்றும் மணிகண்டன்

அதேபோன்று சிறுபாக்கத்தைச் சேர்ந்த பெரியசாமி (50) என்பவர் நேற்று அதிகாலை வீட்டை விட்டு வெளியே சென்றவர், அறுந்து கிடந்த மின்கம்பியை கவனக்குறைவினால் மிதித்த போது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவரது உடலும் பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்கள் தொடர்பாக சிறுபாக்கம் போலீஸார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

20 hours ago

மேலும்