மின் கட்டணம் தொடர்பாக மோசடி எஸ்எம்எஸ்: டான்ஜெட்கோ எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

சென்னை: மின் கட்டணம் தொடர்பாக வரும் மோசடி குறுஞ்செய்திகளை நம்ப வேண்டாம் என்று டான்ஜெட்கோ சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "சமீப காலமாக இன்றிரவு மின்சார சேவை துண்டிக்கப்படும் என்றும் கட்டணம் செலுத்தியிருந்தாலும் அபராதத்தை தவிர்க்க வாட்ஸ் அப் செயலியில் போலி லிங்குகள் வழி மற்றும் குறிப்பிட்ட கைபேசி எண்ணை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளுதல் போன்ற ஏமாற்று செயல்களின் வாயிலாக நுகர்வோர்களின் வங்கி கணக்கிலிருந்து பண மோசடிகள் நடைபெற்று வருகிறது

ஆகையால், மின் இணைப்பு துண்டிக்கப்படும் என வரும் மோசடி குறுஞ்செய்திகளை புறக்கணித்து விழிப்புணர்வோடு இருக்குமாறு நுகர்வோர்களுக்கு டான்ஜெட்கோவின் பணிவான வேண்டுகோள். மேலும், மின் இணைப்பின் நிலை மற்றும் மின் கட்டண தகவல்களை தமிழ்நாடு மின்சார வாரியம் அதிகாரபூர்வ இணையதளத்தில் https://tangedco.org சரிபார்க்கவும், மோசடியாக வரும் எண்களுக்கு பதிலளிக்கவோ அல்லது திரும்ப அழைக்கவோ வேண்டாம். மேலும் 1930 சைபர் குற்ற உதவி எண்ணிற்கு தெரிவிக்கவும்." இவ்வாறு அந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

47 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்