திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு; துரைமுருகன், டி.ஆர்.பாலுவும் போட்டியின்றி தேர்வு

By செய்திப்பிரிவு

சென்னை: திமுக பொதுக்குழுக் கூட்டம் சென்னையில் இன்று (அக்.9) நடைபெற்றது. இதில் கட்சித் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார். மேலும், பொதுச் செயலாளராக துரைமுருகன், பொருளாளராக டி.ஆர்.பாலு ஆகியோரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

திமுகவின் 15-வது உட்கட்சிப் பொதுத்தேர்தல் நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே ஒன்றியம், நகரம், நகரியம், பேரூர், பகுதி, மாவட்டம், மாநகரச் செயலாளர்கள், நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்று, நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுவிட்டனர். திமுக தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் மற்றும் 4 தணிக்கைக் குழு உறுப்பினர் பதவிகளுக்குப் போட்டியிடுவோரிடம் நேற்று முன்தினம் அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. திமுக தலைவர் பதவிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் 2-வது முறையாக வேட்புமனு தாக்கல் செய்தார்.

இதேபோல, பொதுச் செயலாளர் பதவிக்கு துரைமுருகன், பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலு ஆகியோரும் மனு தாக்கல் செய்திருந்தனர். தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் பதவிக்கு வேறு யாரும் மனு தாக்கல் செய்யவில்லை.

இந்நிலையில், திமுக தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட தலைமைக் கழக நிர்வாகிகளை அதிகாரபூர்வமாகத் தேர்வு செய்வதற்கான கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் சென்னை கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள புனித ஜார்ஜ் பள்ளி விங்க்ஸ் கன்வென்ஷன் சென்டரில் இன்று (அக். 9) காலை 10 மணிக்கு நடைபெற்றது. இக்கூட்டத்தில் திமுக தலைவராக முதல்வர் மு.க.ஸ்டாலின், பொதுச் செயலாளராக துரைமுருகன், பொருளாளராக டி.ஆர்.பாலு ஆகியோர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

20 hours ago

மேலும்