அக்.17, 20, 26 தேதிகளில் அதிமுக பொன்விழா நிறைவு பொதுக்கூட்டம்: பழனிசாமி அறிவிப்பு

By செய்திப்பிரிவு

அதிமுக பொன்விழா நிறைவு மற்றும் 51-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டங்கள் அக்.17,20, 26-ல் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்படும் என்று இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: அதிமுக, பொன்விழா ஆண்டை நிறைவு செய்து, அக்.17-ம் தேதி 51-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

இதையொட்டி, கட்சிரீதியான மாவட்டங்கள், புதுச்சேரி,கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களில் அக்.17, 20, 26 ஆகிய3 நாட்களும் அதிமுக பொன்விழா நிறைவு மற்றும் 51-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டங்கள் நடக்க உள்ளன.

கட்சி எம்எல்ஏக்கள், கட்சி சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகள் அனைவரும் தங்கள்மாவட்டத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டுகிறேன்.

அக்.17-ம் தேதி ஆங்காங்கே எம்ஜிஆர், ஜெயலலிதா உருவச் சிலைகள், படங்களுக்கு மாலை அணிவித்து, மக்களுக்கு இனிப்புவழங்கியும், ஏழை, எளியோருக்கு அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்கியும் கொண்டாட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்