சென்னை: எஸ்.எஸ்.இன்டர்நேஷனல் லைவ் சார்பில் `தெய்வத்துள் தெய்வம்’ நாடகம் அக்டோபர் 14, 15, 16 ஆகிய 3 நாட்களும் சென்னை மியூசிக் அகாடமியில் தினமும் மாலை 6.30 மணிக்கு நடத்தப்பட உள்ளது.
இந்த நாடகத்தை எழுதி இயக்கியிருப்பவர் எஸ்.எஸ்.இன்டர்நேஷனல் லைவ் இயக்குநர்களில் ஒருவரான இளங்கோ குமணன். இவர் கடந்த ஆண்டு வெளியான ‘சிவக்குமாரின் சபதம்’ திரைப்படத்தில் அறிமுகமாகி கவனம் ஈர்த்த நடிகரும்கூட. ‘தெய்வத்துள் தெய்வம்’ நாடகத்தின் சிறப்புகள் குறித்து அவர் கூறியதாவது: திண்டிவனத்தில் ஆன்மிக ஈடுபாட்டுடன் வளரும் சிறுவன் சுவாமிநாதன், காஞ்சி மடத்துக்கு பொறுப்பேற்கும் தருணத்தில் இருந்து ஸ்ரீஜெயேந்திரர், ஸ்ரீவிஜயேந்திரர் ஆகியோர் காஞ்சி மஹா பெரியவருக்கு கனகாபிஷேகம் செய்வது வரையிலான சம்பவங்கள் உணர்வுப்பூர்வமாக இந்த நாடகத்தில் இடம்பெறுகின்றன.
காஞ்சி பெரியவரின் பெருவாழ்வை, 13-52 வயது வரை தீரஜ் மோகனும், 52-72 வயது வரை இஎம்எஸ் முரளியும், 72-100 வயதுவரை வாசுதேவனும் காஞ்சி பெரியவரை மனதில் வரித்துக்கொண்டு நடித்துள்ளனர். கரோனாவால் 2 ஆண்டுகள் எந்த நாடகமும் நடத்தவில்லை. கடந்த மாதம்தான் கும்பகோணத்தில் ‘தெய்வத்துள் தெய்வம்’ நாடகத்தை அரங்கேற்றினோம். நாங்கள் அரங்கேற்றிய நாளில் மகாளய அமாவாசையும் அடுத்த நாள் நவராத்திரியும் வந்தது. இந்த நாட்களின் சிறப்பு குறித்து காஞ்சி பெரியவர் என்ன கூறியிருக்கிறார் என்பதை, அன்றைக்கு நடந்த நாடகத்தில் இடம்பெற வைத்தோம். காஞ்சிபெரியவரின் வார்த்தைகள் எந்த காலத்துக்கும் பொருந்தும். இந்து மதத்தின் வரலாறு என்ன என்று காஞ்சி பெரியவர் தெளிவுபடுத்தியதைக்கூட இந்த நாடகம் மூலம் உணரலாம்.
‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்துக்கு அரங்கம் அமைத்துள்ள கலை இயக்குநர் தோட்டா தரணிதான் இந்த நாடகத்துக்கும் அரங்கம் அமைத்துள்ளார் என்பது பெருமையான விஷயம். 100-க்கும் மேற்பட்ட கலைஞர்களின் ஒருங்கிணைப்பில் பிரம்மாண்ட ஆன்மிகப் படைப்பாக ‘தெய்வத்துள் தெய் வம்’ நாடகம் உருவாகியுள்ளது. இந்த நாடகத்துக்கான அனுமதி முற்றிலும் இலவசம். இலவச நுழைவுச் சீட்டுகளைப் பெற 98401 72704 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
47 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago