தமிழகத்தில் மழை, வெள்ள மீட்பு குழுக்களில் முதல்முறையாக பாம்பு பிடி வீரர்களை வருவாய்த் துறை சேர்த்துள்ளது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின்போது சென்னை, திருவள்ளூர், காஞ்சி புரம், கடலூர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் வெள்ளத்தால் மிகப்பெரிய பாதிப்புகள் ஏற்பட்டன. அதை எதிர்கொள்ள அரசு நிர்வாகம் சந்தித்த பல்வேறு பிரச்சினைகளில் இருந்து கற்ற படிப்பினைகளின் அடிப்படையில், தற்போது பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், அதை எதிர்கொள்ள வருவாய்த் துறை சார்பில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4 ஆயிரத்து 739 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் மொத்தம் 29 ஆயிரத்து 885 உறுப்பினர்கள் இடம்பெற் றுள்ளனர்.
மேலும் பருவமழை நிவாரணப் பணிகளை கண்காணிக்கவும் மேற் பார்வையிடவும், சென்னைக்கு 16 ஐஏஎஸ் அதிகாரிகள், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு தலா 4 ஐஏஎஸ் அதிகாரிகள், மற்ற மாவட்டங்களுக்கு தலா ஓர் ஐஏஎஸ் அதிகாரி என மாநிலம் முழுவதும் மொத்தம் 39 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் பலமுறை வெள் ளத்தை அரசு எதிர்கொண்டாலும், இந்த முறை பல்வேறு புதுமை களுடன் எதிர்கொள்ள இருக்கிறது. அதில், பருவமழையை எதிர்கொள் ளும் குழுக்களில் பாம்பு பிடி வீரர்களை சேர்த்திருப்பதும் ஒன்று.
இது தொடர்பாக மாநில வருவாய் நிர்வாக ஆணையர் கொ.சத்யகோபாலிடம் கேட்ட போது, அவர் கூறியதாவது:
கடந்த ஆண்டு வெள்ளம் மற்றும் அதற்கு முன்பு ஏற்பட்ட வெள்ளம் ஆகியவற்றின் அடிப்படையில் சில புதுமைகள் இந்த ஆண்டு புகுத்தப்பட்டுள்ளன.கடந்த ஆண்டு மத்திய பேரிடர் மீட்புப் படையினர்தான் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த ஆண்டு தமிழக போலீஸார் 1,000 பேருக்கு பயிற்சி அளித்திருக்கிறோம். பேரிட ரின்போது மத்திய படையின ருக்காகக் காத்திருக்காமல், நமது போலீஸாரே மீட்புப் பணியிைல் ஈடுபடுவார்கள்.
மேலும், உள்ளூர் பகுதியில் உள்ள நீச்சல் தெரிந்த நபர்களைக் கொண்டு, தகவல் கிடைத்தவுடன் விரைவாக செயல்படும் 1,499 குழுக்களை அமைத்திருக்கிறோம். இவர்கள் உள்ளூரிலேயே இருந்துகொண்டு, பேரிடர் குறித்த தகவல் கிடைத்தவுடன் 2 முதல் 15 நிமிடங்களுக்குள் சம்பவ இடத்துக்கு செல்லும்விதமாக தயார்படுத்தப்பட்டுள்ளனர்.
இது மட்டுமல்லாது, கடந்த வெள்ளத்தின்போது பாம்புகள் தொல்லை அதிகமாக இருந்தது. அந்தப் பிரச்சினையைத் தீர்க்க வனத்துறையுடன் கலந்தாலோ சித்து, பருவமழையை எதிர் கொள்ளும் குழுவில் முதல்முறை யாக பாம்பு பிடி வீரர்களை சேர்த்திருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இது தொடர்பாக சென்னை மண்டல வன உயிரின காப்பாளர் கீதாஞ்சலியிடம் கேட்டபோது, “சென்னையை பொறுத்தவரை சென்னை மாநகராட்சியின் 9 மண்டலங்களில் மட்டும் பாம்புகள் தொல்லை உள்ளது. அதனால் அந்த மண்டலங்களில் தலா 3 பேர், சென்னை விமான நிலையத்துக்கு 3 பேர் என அனுப்பியிருக்கிறோம். இவர்கள் அனைவரும் இருளர் சங்கத்தைச் சேர்ந்த வனத்துறை யால் அங்கீகரிக்கப்பட்ட பாம்பு பிடி வீரர்கள் ஆவர். பருவமழை முடியும் வரை அவர்கள் அப்பணியில் ஈடுபடுவார்கள்” என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
52 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
6 hours ago