கோவை - ஜபல்பூர் இடையிலான வாராந்திர சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு

By செய்திப்பிரிவு

கோவை-ஜபல்பூர் இடையிலான வாராந்திர சிறப்பு ரயில் சேவை 2023 ஜனவரி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சேலம் கோட்ட ரயில்வே அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

கோவை-மத்தியப்பிரதேச மாநிலம் ஜபல்பூர் இடையே இயக்கப்பட்டுவரும் வாராந்திர சிறப்பு ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜபல்பூர்-கோவை இடையிலான வாராந்திர சிறப்பு ரயில் (எண்:02198) இன்று முதல் வரும் 28-ம் தேதி வரை, வெள்ளிக்கிழமை தோறும் இரவு 11.50 மணிக்கு ஜபல்பூரிலிருந்து புறப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை மாலை 5.10 மணிக்கு கோவை வந்தடையும்.

இதே ரயில், வரும் நவம்பர் 4-ம் தேதி முதல் டிசம்பர் 30-ம் தேதி வரை வெள்ளிகிழமைதோறும் இரவு 11.50 மணிக்கு ஜபல்பூரிலிருந்து புறப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை மதியம் 2.40 மணிக்கு கோவை ரயில்நிலையம் வந்தடையும்.

மேலும், கோவை-ஜபல்பூர் இடையிலான வாராந்திரசிறப்பு ரயில் (எண்:02197) வரும் 10-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை திங்கட்கிழமைதோறும் பிற்பகல் 3.25 மணிக்கு கோவையிலிருந்து புறப்பட்டு, புதன்கிழமை காலை 8.45 மணிக்கு ஜபல்பூர் சென்றடையும்.

இதே ரயில், வரும் நவம்பர் 7-ம் தேதி முதல் 2023 ஜனவரி 2-ம் தேதி வரை திங்கட்கிழமைதோறும் மாலை 5.05 மணிக்கு கோவையிலிருந்து புறப்பட்டு, புதன்கிழமைகாலை 8.45 மணிக்கு ஜபல்பூர் சென்றடையும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

8 mins ago

தமிழகம்

36 mins ago

தமிழகம்

37 mins ago

தமிழகம்

52 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்