சென்னை மெட்ரோ பணி: ஆழ்வார்பேட்டை லஸ் சர்ச் சாலையில் போக்குவரத்து மாற்றம்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் பணி காரணமாக ஆழ்வார்பேட்டை லஸ் சர்ச் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படவுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, ஆழ்வார்பேட்டை, லஸ் சர்ச் சாலையில் மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக லஸ் சர்ச் சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஒரு வார காலத்திற்கு சோதனை அடிப்படையில் 8-ம் தேதி முதல் போக்குவரத்து மாற்றங்களைச் செய்யப்படும் என்று போக்குவரத்து காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, லஸ் சந்திப்பிலிருந்து லஸ் சர்ச் சாலை வழியாக டி.டி.கே சாலைக்கு செல்ல வேண்டிய வாகனங்கள் மாற்று பாதையில் அனுப்ப உத்தேசிக்கப்பட்டுள்ளது.

மாநகர பேருந்துகள் அமிர்தாஞ்சன் சந்திப்பிலிருந்து ராயப்பேட்டை நெடுஞ்சாலை. டாக்டர் ஆர்.கே.சாலை, மியூசிக் அகாடமி மேம்பால சர்வீஸ் சாலை, டி.டி.கே. மேம்பால சர்வீஸ் சாலை வழியாகவும் செல்லலாம். இலகு ரக வாகனங்கள் டி.சில்வா சாலை மற்றும் தேசிகா சாலை வழியாகவும் செல்லலாம். முசிறி சுப்பிரமணியம் சாலையில் போக்குவரத்தில் எந்தவிதமான மாற்றமும் இல்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்