தமிழகத்தில் பெண்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண திட்டத்தில் இதுவரை 176 கோடி பயணங்கள்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் நகரப் பேருந்துகளில் பெண்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண திட்டத்தின் கீழ் இதுவரை 176.84 கோடி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தமிழக முதல்வராக ஸ்டாலின் கடந்த ஆண்டு மே மாதம் 7-ம் தேதி பதவியேற்ற உடன் 5 கோப்புகளில் கையெழுத்திட்டார். இதில், 'நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம்' என்ற திட்டமும் இடம்பெற்று இருந்தது. இந்தத் திட்டம், மே 8-ம் முதலே நடைமுறைக்கு வந்தது. இதல் நகர்புறங்களில் வெள்ளை போர்டு கொண்ட பேருந்துகளிலுரும், கிராமப்புறங்களில் நகரப் பேருந்துகளிலும் செயல்படுத்தப்பட்டது.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண்கள் அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணம் மேற்கொள்வது பற்றி அமைச்சர் பொன்முடி பேசியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. கூட்டம் ஒன்றில் பேசிய அமைச்சர் பொன்முடி, பெண்களைப் பார்த்து, “நீங்க எங்க போனாலும் ஓசி பஸ்லதானே போறீங்க?” என்று பேசியது பெரிய சர்ச்சையானது.

இதனைத் தொடர்ந்து, கோவையில் அரசுப் பேருந்தில் பயணம் மேற்கொள்ளும் மூதாட்டி ஒருவர், “நான் ஓசியில் அரசு பஸ்ஸில் வரமாட்டேன். எனக்கு டிக்கெட் கொடுங்கள்” என்று அரசு பஸ் கண்டக்டரிடம் கேட்கும் வீடியோ வைரல் ஆனது.

இந்நிலையில், தமிழகத்தில் நகரப் பேருந்துகளில் பெண்களுக்கான கட்டணமில்லா திட்டத்தின் கீழ் அக்டோபர் 5-ம் தேதி வரை 176.84 கோடி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டு தெரியவந்துள்ளது. நாள் ஒன்று சராசரியாக 39.21 லட்சம் பயணங்கள் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போக்குவரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE