சென்னை: அக்டோபர் மாதத்தில் வங்கிகளுக்கு 21 நாட்கள் விடுமுறை என சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இது குறித்து வங்கி அதிகாரிகள் கூறியதாவது: வங்கிகளுக்கு விடுமுறை என்பது மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடும். தமிழகத்தில் நடப்பு அக்டோபர் மாதத்தில் 3 நாட்கள் மட்டுமே பொது விடுமுறை. இதன்படி, அக். 4 சரஸ்வதி பூஜை, 5-ம் தேதி விஜயதசமி மற்றும்24-ம் தேதி தீபாவளி ஆகியவற்றுக்கு மட்டுமே வங்கிகளுக்கு விடுமுறையாகும். அக். 2-ம் தேதி காந்தி ஜெயந்தி தினம் பொது விடுமுறை நாளாகும். ஆனால், இந்த ஆண்டு விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை வந்ததால் அன்றைய தினம் பொது விடுமுறை இல்லை. மேலும், 2-வது, 4-வது சனிக்கிழமைகளில் வங்கிகளுக்கு வழக்கம்போல விடுமுறையாகும். எனவே, சமூக வலைதளங்களில் பரவி வரும் தவறான தகவல்களை யாரும் நம்ப வேண்டாம் என்று வங்கி அதிகாரிகள் கூறினர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago