சென்னை: ஆயுத பூஜையையொட்டி ஊருக்குச் சென்றவர்கள் திரும்பி வருவதற்கு ஏதுவாக வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் 1,150 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
ஆயுதபூஜையையொட்டி தொடர் விடுமுறை காரணமாக பொதுமக்கள் நெரிசலின்றி பயணிக்கும் வகையில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்திருந்தார். அதன்படி, செப்.30, அக்.1 ஆகிய நாள்களில் மொத்தம் 5,679 பேருந்துகள் சென்னையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட்டன. அவற்றில் 3 லட்சத்து 12,345 பேர் சொந்த ஊர்களுக்கு பயணித்திருந்தனர். இதேபோல் சொந்த ஊர்களுக்குச் சென்றவர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னைக்குத் திரும்பவும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
மொத்தம் 3,250 பேருந்துகள்: இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வார இறுதி நாட்கள் மற்றும் தொடர் விடுமுறை (ஆயுதபூஜை) முடிந்து பயணிகள் பல்வேறு ஊர்களிலிருந்து சென்னைக்குத் திரும்பி வருவதற்கு ஏதுவாக அக்.5, 6 ஆகிய நாள்களில் அரசு போக்குவரத்து கழகங்கள் மூலமாக சிறப்புப் பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி பல்வேறு ஊர்களிலிருந்து சென்னைக்கு நாள்தோறும் இயக்கக்கூடிய 2,100 பேருந்துகளுடன் கூடுதலாக 1,150 பேருந்துகள் என மொத்தம் 3,250 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில் பயணிக்க விரும்புவோர், www.tnstc.in என்ற இணையதளம் மற்றும் tnstc செயலி மூலமாக முன்பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago