அரியக்குடியில் கோயில், வீடு அருகே பள்ளிவாசல் திறக்க பாஜக, இந்து அமைப்பு எதிர்ப்பு

By செய்திப்பிரிவு

காரைக்குடி அரியக்குடி கோயில், வீடு அருகே பள்ளிவாசலை திறக்க பாஜக, விசுவ ஹிந்து பரிஷத், இந்து முன்னணியினர் எதிர்ப்பு தெரிவித்ததால் அப்பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டனர்.

அரியக்குடியில் தென்திருப்பதி என்று அழைக்கப்படும் பிரசித்திபெற்ற திருவேங்கடமுடையான் கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்குச் சொந்தமான கோயில், வீடு அருகே அக்.7-ம் தேதி பள்ளிவாசல் திறக்க உள் ளதாக தகவல் பரவியது.

இந்நிலையில் கோயில், வீடு அருகே பள்ளிவாசல் திறக்க எதிர்ப்பு தெரிவித்து, பாஜக, விசுவ ஹிந்து பரிஷத், இந்து முன்னணியினர் அப்பகுதியில் குவிந்தனர். பதற்றமான சூழலால் அங்கு போலீஸார் குவிக்கப்பட்டனர்.

தொடர்ந்து முஸ்லிம்களை அழைத்து, வட்டாட்சியர் மாணிக்கவாசகம் பேச்சுவார்த்தை நடத்தினார். வட்டாட்சியர் கூறியதாவது: அரியக்குடியில் அரபிக் பாடசாலைதான் கட்டினோம். பள்ளிவாசல் கட்டவில்லை என முஸ்லிம் தரப்பினர் தெரிவித்தனர்.

எதுவாக இருந்தாலும் உரிய அனுமதி பெற்று திறக்கும்படி அறிவுறுத்தினோம். அவர்களும் உரிய அனுமதி பெற்று திறப்பதாக கூறியுள்ளனர் என்றார். இதனிடையே அரியக்குடி ஊராட்சித் தலைவர் சுப்பையா, கட்டிட வரைபட அனுமதியை ரத்து செய்து உத்தரவிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்