சென்னை: மதுபோதையில் நண்பனை தாக்கி கொலை செய்தவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை 7 ஆண்டு சிறை தண்டனையாக குறைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் மணி மற்றும் விக்கி. இவர்கள் இருவரும், பால் கவர்களை சேகரித்து விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் மது அருந்தும்போது இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது மணி தாக்கியதில், அவரது நண்பர் விக்கி உயிரிழந்தார். இந்த வழக்கை விசாரித்த கோவை அமர்வு நீதிமன்றம், மணிக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தது. தனக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மணி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மணிக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை 7 ஆண்டுகளாக குறைத்து உத்தரவிட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
10 mins ago
தமிழகம்
55 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago