தமிழகத்தில் 380 பேருக்கு பன்றி காய்ச்சல் பாதிப்பு

By செய்திப்பிரிவு

தஞ்சாவூர்: தமிழகத்தில் பன்றிக் காய்ச்சலுக்கு 380 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தில் 380
பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்கள் 17 பேர்.மீதமுள்ளவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் 3 - 4 நாள்கள் தனிமைப்படுத்திக் கொண்டால் போதுமானது. பருவநிலை மாற்றங்களால் ஏற்படும் காய்ச்சல் இருப்பதால், தமிழகம் முழுவதும் காய்ச்சல் முகாம்களை நடத்த முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். இதன்படி, கடந்த 11 நாட்களாக நாள்தோறும் 1,000 முதல் 1,500 முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE