காரைக்கால் அகில இந்திய வானொலியில் (பண்பலை ஒலிபரப்பு) நேற்று முதல் 4 மணி நேரம் இந்தி நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்பட்டு வருகின்றன. இந்தியை திணிக்க முயலும் பிரசார் பாரதியின் இந்த நடவடிக்கைக்கு நேயர்கள், தமிழ் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
1995-ம் ஆண்டு காரைக்காலில் அகில இந்திய வானொலி நிலையம் தொடங் கப்பட்டபோது, மாலை முதல் இரவு வரை மட்டுமே ஒலிபரப்பு இருந்து வந்தது. பின்னர் அதிக வரவேற்பையும், அதிக விளம்பர வருவாயும் பெற்றதால் படிப்படியாக ஒலிபரப்பு நேரம் நீட்டிக்கப்பட்டு, தற்போது காலை 5.52 மணி முதல் இரவு 11.20 மணி வரை ஒலிபரப்பாகி வருகிறது. இந்தியாவிலேயே அதிக வருவாய் பெற்றுத்தரும் உள்ளூர் வானொலி நிலையங்களில் காரைக்கால் பண்பலை முதலிடத்தில் உள்ளது.
கடந்த 2014-ல் பிரசார் பாரதி அமைப்பு நாட்டில் உள்ள 86 உள்ளூர் வானொலி நிலையங்களை காலை 10 முதல் மாலை 5 மணி வரை ஒரே நெட் ஒர்க்கின் கீழ் கொண்டுவர முடிவு செய்து, தொடர்புடைய நிலையங்களுக்கு உத்தரவு அனுப்பியது. இதில் தமிழகத்தில் 2 நிலையங்கள் உட்பட காரைக்கால் நிலையமும் அடங்கும். இந்த நேரங்களில் முழுவதும் இந்தி நிகழ்ச்சிகள் இருக்கும் என்பதால் பல்வேறு அரசியல் கட்சிகளும், தமிழ் ஆர்வலர்களும், நேயர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் கடைசி நேரத்தில் அந்த முடிவு கைவிடப்பட்டது.
ஆனால், தற்போது எவ்வித முன்னறிவிப்புமின்றி திடீரென நேற்று முதல் காலை 9-10, பிற்பகல் 3-5, இரவு 9-10 ஆகிய நேரங்களில் மும்பை விவித்பாரதி நிலையத்திலிருந்து இந்தி நிகழ்ச்சிகள் ஒலிப்பரப்பப்பட்டு வருகின்றன. இது நேயர்கள், தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பாமக செய்தித் தொடர் பாளர் வழக்கறிஞர் கே.பாலு ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது: காரைக்கால் வானொலியில் தற்போது முக்கியமான நேரங்களில் இந்தி நிகழ்ச்சிகள் ஒலிபரப் பப்படுவது கண்டனத்துக்குரியது. இந்தியை திணிக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என்றார்.
மயிலாடுதுறை மாவட்டம் ஆனைமட்டத்தைச் சேர்ந்த நேயர் எஸ்.குஞ்சிதபாதம் கூறியது: காரைக்கால் வானொலி நிலையத்துக்கு இப்பகுதியில் ஏராளமான நேயர்கள் உள்ளனர். தற்போது இதில் இந்தி நிகழ்ச்சிகளை புகுத்தியுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. அதிக நேரம் இந்தி நிகழ்ச்சிகள் ஒலிபரப்பானால் படிப்படியாக இந்த வானொலியை கேட்போரின் எண்ணிக்கை முற்றிலும் குறைந்துவிடும். விளம்பர வருவாயும் இருக்காது.
உள்ளூர் மக்களின் பங்கேற்பை அதிகப்படுத்தி மாற்றங்களை கொண்டுவர சமுதாய வானொலி நிலையங்களை தொடங்க மத்திய அரசு ஊக்கப்படுத்தி வருகிறது. ஆனால் ஏற்கெனவே அந்த வகையில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள காரைக்கால் வானொலியில் இந்த நட வடிக்கை மேற்கொண்டுள்ளது சரியான தல்ல என்றார். இதுகுறித்து வானொலி நிலைய வட்டா ரங்களில் கேட்டபோது, ‘‘நாடு முழுவதும் ஒரே மாதிரியான நிகழ்ச்சி வடிமைப்பை கொண்டு வரும் நோக்கில் இத்தகைய மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது’’ என்றனர்
முக்கிய செய்திகள்
தமிழகம்
50 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago