புதுச்சேரி: அதிகாரிகள் அலட்சியத்தால் காவல்துறை உள்பட மூன்று துறைகளில் 426 வாகனங்கள் பழுதாகி வீணாகிப்போன அவலம் நிகழ்ந்துள்ளதாக ஆளுநர், தலைமைச்செயலரிடம் மனு அளிக்கப் பட்டுள்ளது.
ராஜீவ்காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பு தலைவர் ரகுபதி அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: புதுச்சேரி அரசுத் துறைகளில் பயன்பாட்டில் உள்ள வாகனங்கள் முறையாக பராமரிக்காததால் பழு தாகி, பயனற்று அந்தந்த துறை வளாகத்தில் ஆண்டுக் கணக்கில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. காவல், வேளாண், தீயணைப்பு ஆகிய துறைகளில் மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களின் விவரங்கள் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் கேட்டதற்கு, காவல்துறையில் 189, வேளாண்துறையில் 188, பாசிக் 47, தீயணைப்புத்துறை 6 எனஇந்த துறைகளில் மட்டும் 20 ஆண்டுகளுக்கும் மேலாக 426 வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் அளித்துள்ளனர்.
பொதுவாக ஒரு வாகனம் பழுதாகும்போது இதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்காமல் அதிகாரி கள் அலட்சியம் காட்டியதின் விளைவுதான் 426 வாகனங்கள் பழுதாகி, பயனற்றுவிட்டது. இந்த வாகனங்கள் பயன்பாட்டிற்கு உகந்ததல்ல என தெரியவந்த பிறகு, இந்த வாகனங்களை உரிய காலத்தில் ஏலம் விட நடவடிக்கை எடுக்காததால் பல கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு வாகனங்கள் வீணாக்கப்பட்டுள்ளன. மேலும், இவர்கள் புதிதாக சொகுசு கார்கள் வாங்குவதற்கு ஆர்வம் காட்டுவதுபோல், வாகனங் களை உரிய நேரத்தில் பழுது நீக்க நடவடிக்கை எடுத்திருந்தால் பல வாகனங்கள் பயன்பாட்டிலேயே இருந்திருக்கும். மேலே குறிப்பிட் டுள்ள மூன்று துறைகள் தவிர்த்து,பொதுப்பணித்துறை, நலவழித் துறை, மின்துறைகள் உட்பட புதுச்சேரியில் உள்ள சுமார் 46 துறைகளிலும் இதுபோன்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை கணக்கெடுத்தால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் இருக்கும் என்பதில் ஐயமில்லை.
இதன்மூலம், மிகச்சிறிய பரப்பளவு கொண்ட புதுச்சேரி அரசு அலுவலகங்களில் மிகஅதிக அளவிலான வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளது தெளிவா கிறது. எனவே புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசுத் துறைகளிலும் இதுபோன்று பயனற்று, பழுதாகி உள்ள வாகனங்களை உரிய காலத்தில் ஏலம் விட நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். துறைகளின் வாகன பயன்பாட்டை வெகுவாக குறைப்பதற்கும், புதிய வாகனங்கள் வாங்குவதற்கு கடும் விதிமுறைகளை வகுத்தளிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago