கச்சிராயப்பாளையம் பள்ளி அருகே பேருந்துகளை நிறுத்துவதில்லை

By செய்திப்பிரிவு

கள்ளக்குறிச்சி: கச்சிராயப்பாளையம் அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே பேருந்துகளை நிறுத்தாத தால் மாணவிகள் பெரும் சிரமத் திற்கு ஆளாவதாக அப்பகுதி மக்கள் கவலையுடன் ‘இந்து தமிழ் திசை'-யின் ' உங்கள் குரல்' வாயிலாக பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து 'இந்து தமிழ் திசை' சார்பில் விசாரித்த போது: கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் இருந்து கச்சிராயப் பாளையம் வரை அரசு நகரப்பேருந்து தடம் எண் 26 இயக் கப்படுகிறது. இந்தப் பேருந்தை, கச்சிராயப்பாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே வுள்ள பேருந்து நிறுத்தத்தில் நிறுத்துவதில்லை. இதனால் மாணவிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். அரசு இயக்கும் பெண்களுக்கான இலவச பயணத்தை பயன்படுத்த முடியாமல் தவிக்கின்றனராம்.

மேலும் பெண்களிடம், ஓசிப் பயணம் எனவும், உடம்பு நல்லாத் தான இருக்கு, கொஞ்ச தூரம் நடந்து செல்லமாட்டியா என அரசுப்பேருந்து நடத்துநர் ஒருமையில் தரக்குறைவாக பேசுவதையும் வாடிக்கையாக கொண்டிருப்பதாக பெண்கள் புகார் தெரிவித்தனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள்சைல்டு கேர் பிரிவுக்கும், சின்ன சேலம் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை மேலாளிரிடம், பள்ளி நிர்வாகத்திடமும் புகார் அளித்தும் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை எனத் தெரிவித்தனர். சைல்டு கேர் பிரிவினர் பள்ளிக்கு வந்து விசாரித்துள்ளனர். அவர்கள் பேருந்துக்காக காத்திருந்த போது, பேருந்து நிற்காமல் சென்றுள்ளது. இதனால் அவர்களும் உண்மைத் தன்மையை புரிந்து கொண்டு போக்குவரத்துத் துறைக்கு புகார் அளித்துள்ளனர்.

பெண்கள் மேல்நிலைப்பள்ளி யில் பணிபுரியும் அந்தத் தொகுதியின் திமுக எம்எல்ஏ உதயசூரியன் மனைவியிடமும் புகார் தெரிவித்தனர். அவரோ, இதுகுறித்து புகார் அளித்தால் பள்ளிக்கு கெட்டபெயர் ஏற்படும் எனத் தெரிவித்துஒதுங்கிக் கொண்டாராம். இதை யடுத்து உதயசூரியன் எம்எல்ஏ-வை தொடர்புகொண்டபோது, அவர் பேச முன்வரவில்லை.

இதுதொடர்பாக சின்னசேலம் அரசுப் போக்குவரத்துக் கழகபணிமனை மேலாளர் குணசேகரனிடம் கேட்டபோது, "இந்தப் பணிமனையில் இரு தினங்களுக்கு முன்னர் தான் வந்து இணைந் துள்ளேன். எனவே இதுதொடர்பாக என்ன நடவடிக்கை எடுத்துள்ளனர் என்பதை விசாரித்து, அப்பிரச்சினை நீடித்திருந்தால், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்