போராட்டத்திலுள்ள மின்துறையினர் மீது எஸ்மா பாயும்: புதுச்சேரி ஆளுநர் தமிழிசை எச்சரிக்கை  

By செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: மின்துறை தனியார் மயமாக்கத்துக்கு எதிராக மதச்சார்பற்ற கட்சியினர் ஆளுநர் தமிழிசை மற்றும் பாஜகவுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். இந்நிலையில் மக்களை பாதிக்கும் வகையில் போராட்டம் நடத்தும் மின்துறையினர் மீது எஸ்மா பாயும் என்று ஆளுநர் தமிழிசை எச்சரித்துள்ளார்.

புதுச்சேரி அண்ணாசாலையில் காமராஜர் சிலை வரை திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, சிபிஐ (எம்-எல்) உள்ளிட்ட மதச்சார்பற்ற கட்சிகளின் மனித சங்கிலி இன்று நடந்தது. புதுச்சேரி மின்துறையை தனியாருக்கு தர டெண்டர் விடப்பட்டதை எதிர்த்து பதாகைகள் கோஷங்கள் அதிகளவில் எழுப்பப்ட்டன. இந்நிகழ்வில் திமுக மாநில அமைப்பாளர் சிவா, காங்கிரஸ் மாநிலத்தலைவர் ஏ.வி. சுப்பிரமணியன், எம்எல்ஏ வைத்தியநாதன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் சலீம், சிபிஎம் மாநில செயலர் ராஜாங்கம், விடுதலைச் சிறுத்தைகள் தலையாரி, சிபிஐ (எம்எல்) பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும் முன்னாள் முதல்வர் நாராயணசாமி, எம்எல்ஏக்கள் சம்பத், அனிபால் கென்னடி, வைத்தியநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அப்போது காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்க ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள் ஆகியோர் வருவதாக போலீஸார் தெரிவித்தனர். இதையடுத்து மதச்சார்பற்ற அணி தலைவர்கள் காமராஜர் சிலை நோக்கி வந்தனர். அதையடுத்து எஸ்எஸ்பி தீபிகா அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதையடுத்து காமராஜர் சிலை பகுதிக்கு அவர்கள் வரவில்லை. அதே நேரத்தில் தொண்டர்கள் கடுமையாக பாஜகவுக்கு எதிராகவும், ஆளுநர் தமிழிசைக்கு எதிராகவும் கோஷம் எழுப்பத்தொடங்கினர். சாலையில் கயிறு கட்டி போலீஸார் யாரும் வராமல் தடுத்தனர். அச்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு யாரையும் போலீஸார் அனுமதிக்கவில்லை.

இச்சூழலில் கடற்கரைச்சாலை காந்தி சிலைக்கு மாலை அணிவித்து விட்டு காமராஜர் சிலைக்கு புறப்பட்ட ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி மற்றும் பேரவைத்தலைவர் செல்வம் ஆகியோரிடம் போலீஸார் தெரிவித்தனர். ஆனால் முதல்வர் ரங்கசாமி கண்டிப்பாக காமராஜர் சிலைக்கு செல்லவேண்டும் என்று கூறி முதலில் அங்கு வந்தார். அவரைத்தொடர்ந்து அமைச்சர்கள், பேரவைத்தலைவர் ஆகியோர் வந்தனர். இறுதியாக ஆளுநர் வந்தார். அவர்கள் மாலை அணிவிக்க வந்தபோது மனித சங்கிலியில் ஈடுபட்டோர் மின்துறை தனியார் மயமாக்கத்துக்கு எதிராகவும், ஆளுநர், பாஜகவுக்கு எதிராகவும் கோஷம் எழுப்பினர்.

மாலை அணிவித்து வந்த ஆளுநர் தமிழிசை கூறுகையில், "மருத்துவமனைகளில் நோயாளிகள் மீது பாதிப்பை ஏற்படுத்துவத்தை பொறுத்துக் கொள்ள முடியாது. நல்ல விசயத்துக்காக இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மக்கள் பயன்பெறுவார்கள். பொதுமக்களுக்கு இடையூறு செய்வதை பொறுத்துகொள்ள முடியாது. கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பியூஸ்களை துணை மின்நிலையங்களில் எடுத்து செல்வது சரியானதல்லை. போராட்டம் ஒடுக்கப்படும். பொதுமக்களுக்காகதான் இம்முடிவு எடுத்துள்ளோம். விஷமதனமாக திட்டமிட்டு பொதுமக்களுக்கு இடையூறு செய்யவே மின்தடையை ஏற்படுத்தியுள்ளனர். செயற்கை மின்தட்டை ஏற்படுத்துவது சரியல்ல. அத்தியாவசிய சேவைக்கு என்ன நடவடிக்கையோ எடுக்கப்படும். மின்வெட்டு சீராக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். மக்களை பாதிக்கும் வகையில் போராட்டம் நடத்தும் மின்துறையினர் மீது எஸ்மா சட்டம் பாயும் வாய்ப்புள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்