மழைநீர் வடிகால் பணி | அயனாவரம் - போர்ச்சுகீஸ் சாலை சந்திப்பில் இன்று இரவு போக்குவரத்து மாற்றம்

By செய்திப்பிரிவு

சென்னை: மழை நீர் வடிகால் பணி காரணமாக அயனாவரம் - போர்ச்சுகீஸ் சாலை சந்திப்பில் இன்று இரவு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மழைநீர் வடிகால் பணிகள் காரணமாக அயனாவரம். கொன்னூர் நெடுஞ்சாலையில் போர்ச்சுகீஸ் சாலை சந்திப்பில் இன்று (அக்.1 ஆம் தேதி ) இரவு 11 மணி முதல் நாளை (2 ஆம் தேதி ) ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி வரை போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படவுள்ளது.

இதன்படி கொன்னூர், நெடுஞ்சாலையில் மேடவாக்கம் குளம் சாலை சந்திப்பிலிருந்து ஐசிஎப் சந்திப்பை நோக்கி நேராகச் செல்ல அனுமதியில்லை.

இந்த வாகனங்கள் கொன்னூர், ஒன் பாயின்ட் சந்திப்பிலிருந்து ஆண்டர்சன் சாலை, இடதுபுறம் திரும்பி, கான்ஸ்டபிள் சாலை மற்றும் போர்ச்சுகீஸ் சாலை அல்லது பள்ளி சாலை அல்லது டாக்டர் அம்பேத்கர் சாலை வழியாக கொன்னூர் நெடுஞ்சாலைக்கு செல்லலாம்.

கொன்னூர், நெடுஞ்சாலையில் ஐசிஎப் சந்திப்பிலிருந்து மேடவாக்கம் குளம் சாலை சந்திப்பை நோக்கி நேராகச் செல்ல அனுமதியில்லை.

இந்த வாகனங்கள் ஐசிஎப் சந்திப்பிலிருந்து ஐசிஎப் அனெக்ஸ் சாலை, இடதுபுறம் திரும்பி, நியூ ஆவடி சாலை, ராஜி தெரு சந்திப்பு சிக்னல், இடதுபுறம் திரும்பி, ராஜி தெரு, அயனாவரம் சாலை மற்றும் மேடவாக்கம் குளம் சாலை வழியாக கொன்னூர் நெடுஞ்சாலைக்குச் செல்லலாம்.

இவ்வாறு சென்னை பெருநகர காவல் துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

தமிழகம்

52 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்