சென்னை: சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் வைக்கப்பட்டுள்ள கொலுவை கடந்த 26-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் அவரது மனைவி லட்சுமி ரவி ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த கொலுவை பொதுமக்கள் பார்வையிட முதன்முறையாக அனுமதி வழங்கப்படுகிறது. அதன்படி, இன்று முதல் (அக்.1) முதல் அக்.5-ம் தேதி வரை நாள்தோறும் பிற்பகல் 2 முதல் மாலை 5 மணி வரை ஆளுநர்மாளிகையில் மக்கள் கொலுவை காணலாம்.
கொலுவை காண விருப்பமுள்ளவர்கள், பெயர், பாலினம், முகவரி, தொடர்பு எண், அடையாள அட்டை, கொலு காண வரும் நாள் ஆகியவற்றை navaratrirb22@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். அழைக்கப்படுபவர்கள் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையின் அசலை கையில் வைத்திருக்க வேண்டும்என்று ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago