தமிழர் கலாச்சாரத்தை நினைவூட்டும் வகையில் வறண்ட பகுதியில் நடந்த பசுமை திருமணம்

By இ.மணிகண்டன்

தமிழர் கலாச்சாரத்தையும் இளைய தலைமுறையினருக்கு நினை வூட்டும் வகையில் விருதுநகர் மாவட்டத்தில் பசுமைத் திருமணம் நடைபெற்றது.

மேற்கத்திய நாகரிகத்தால் தமிழர் பண்பாடு மறைந்துவரும் இக்காலத்தில் வறட்சி மாவட்டங் களில் ஒன்றான விருதுநகர் மாவட்டம், சந்திரகிரிபுரத்தில் நடைபெற்ற பசுமைத் திருமணம் அனைவரின் கவனத்தை ஈர்த்தது.

விருதுநகர் பாத்திமா நகரைச் சேர்ந்த முருகேசபாண்டியன்-மங்கையர்கரசி மகன் ஸ்டாலின் (31). இவர் பெங்களூருவில் தனியார் நிறுவன பொறி யாளராக உள்ளார். இவருக்கும், திலீபன்-கவிதா ஆகியோரது மகளும் பெங்களூருவில் ஆர்க்கிடெக்ட் ஆக பணிபுரியும் தீபிதாவுக்கும் (28) சந்திரகிரிபுரத்தில் பசுமைத் திருமணம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இத்திருமண அழைப்பிதழோடு மரக்கன்று விதைகள் கொடுக்கப்பட்டன. பாரம்பரிய முறைப்படி இயற்கை யோடு இணைந்து திருமணம் நடத் தப்பட்டது. வேப்பந்தோப்பில் நடைபெற்ற திருமணத்துக்கு வந்தவர்களை வரவேற்க தென்னங்கீற்றால் செய்யப்பட்ட விநாயகர் சிலை, அதைத் தொடர்ந்து நவதானிய கோலம், ஒரு கிராமத்தில் நுழைந்ததைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் வகையில் இளைஞர்கள், சிறுவர் கள் பம்பரம் விளையாடுதல், தூக்கனாங்குருவி கூடுகளோடு வரவேற்பு பாதை, தென்னங்கீற்று தோரணம் மகிழ்ச்சியாக இருந்தது.

தொடர்ந்து சென்றபோது மண் பானை செய்வது, தூரி ஆடுவது, கைவினை பொருட்களுக்கு குழந்தைகள் வர்ணம் தீட்டுவது என கிராமச் சூழல் நீண்டது. மணமேடை முற்றிலும் வித்தி யாசமாக சிவப்பு பசலி கொடியால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அத் துடன் ஆங்காங்கே மூலிகை குடிநீர், பானகம், கரும்புச்சாறு ஆகியவை விருந்தினர்களுக்கு வழங்கப்பட்டன.

வழக்கமான திருமணம்போல் தாலி கட்டும் வைபவம் இல் லாமல், மணமக்கள் மாலை மாற்றிக்கொண்டு மரத்தினால் செய்யப்பட்ட மோதிரம் அணிந்து மரக்கன்று நட்டுவைத்து திருமணம் செய்துகொண்டனர். வந்தவர் களுக்கு சிறுதானிய உணவுகளே விருந்தளிக்கப்பட்டன.

இது குறித்து மணமகன் ஸ்டா லின் கூறியதாவது: இயற்கையை நேசிக்கும் பழக்கம் சிறு வயது முதலே தொற்றி க்கொண்டது. அதனால், எனது திருமணத்தை கிராமச்சூழலில் பசுமைத் திருமணமாக நடந்த திட்டமிட்டேன். எனக்கு வரன் பார்த்தபோது தீபிதா குறித்து முகநூல் மூலம் நிறைய தெரிந்து கொண்டேன். பொறியியல் படித்தி ருந்தாலும் அவர் ஓவியம், சிலம்பம் ஆகியவற்றில் ஆர்வம் கொண்டவராக இருந்தார். அத்துடன் இயற்கையை நேசிக்கும் ஒத்த கருத்து இருவருக்கும் இருந்ததால் பேசி நிச்சயம் செய்துகொண்டோம்.

வழக்கமாக தங்கத்தில் தாலி செய்து அணிந்து கொள்வதில் ஆர்வம் இல்லை. காசு கொடு த்தால் நகைக் கடையில் தங்கத்தை வாங்கலாம். ஆனால், மதிப்புமிக்க அரிய பொருளாக இருக்க வேண்டும் என்பதற்காக அமெரிக்காவில் கோகோபோலோ என்ற மரத்தில் செய்யப்பட்ட மோதிரத்தை இருவரும் மாற்றிக் கொண்டோம்.

மேலும் திருமணத்துக்கு வந்த வர்களுக்கு மரக்கன்றுகளும், விதைகளும் வழங்கப்பட்டுள்ளன. இந்த ஏற்பாடுகளுக்கு நண்பர்கள் மிக உறுதுணையாக இருந்தனர் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

47 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்