சென்னை: விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட ரவுடி மயங்கி விழுந்து, இறந்தார். போலீஸார் அடித்ததால் இறந்ததாக ரவுடியின் குடும்பத்தினர் குற்றம்சாட்டினர். இதுகுறித்து மாஜிஸ்திரேட் விசாரணை நடைபெற்று வருகிறது. சென்னை அயனாவரம், ஏகாங்கிபுரம் 4-வது தெருவைச் சேர்ந்தவர் ஆகாஷ் (20). ரவுடி பட்டியலில் ‘சி’ பிரிவில் உள்ள இவர் மீது ஓட்டேரி, வியாசர்பாடி உட்பட பல்வேறு காவல் நிலையங்களில் சுமார் 10 குற்ற வழக்குகள் உள்ளன. இந்நிலையில், கடந்த 20-ம் தேதி இரவு பெரம்பூர், மங்களபுரத்தைச் சேர்ந்த ரயில்வே ஊழியரான பாலகிருஷ்ணன் என்பவரின் கார் கண்ணாடியை உடைத்த விவகாரம் தொடர்பாக ஓட்டேரி காவல் நிலையபோலீஸார் கடந்த 21-ம் தேதி இரவு 7.45 மணிக்கு ஆகாஷை விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.
மது போதையில் இருந்ததாகக் கூறப்படும் அவர் விசாரணையின்போது மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து அன்று இரவு 11 மணிக்கு ஆகாஷை அவரது அக்கா காயத்ரியிடம் போலீஸார் ஒப்படைத்துள்ளனர். மயக்க நிலையிலிருந்த ஆகாஷை உறவினர்கள் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு உள் நோயாளியாக சிகிச்சைப் பெற்று வந்த ஆகாஷ் நேற்று அதிகாலை 4 மணியளவில் இறந்தார். "விசாரணை என்ற பெயரில் காவல் நிலையம் அழைத்துச் சென்ற போலீஸார் தாக்கியதால்தான் ஆகாஷ் உயிரிழந்துள்ளார். எனவே, அவரது இறப்புக்கு காரணமான போலீஸார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டினர்.
இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள போலீஸார், "விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டபோதே ஆகாஷ் மது போதையில் இருந்தார்.எனவே அவரை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்துவிட்டோம். அதன் பிறகும் அதிகளவு போதை மாத்திரைகளைச் சாப்பிட்டு மயக்கம் அடைந்துள்ளார். அதன்தொடர்ச்சியாகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவரது மரணத்துக்கும், எங்களுக்கும் சம்பந்தம் இல்லை" என்றனர். ஆகாஷின் இறப்புக்கான காரணத்தை அறிய மாஜிஸ்திரேட் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து எழும்பூர் நீதிமன்ற மாஜிஸ்திரேட் லட்சுமி விசாரணையைத் தொடங்கி உள்ளார். இதுகுறித்து மேல் விசாரணை நடத்தவும் போலீஸ் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago