தீபாவளி பண்டிகையின்போது சீன பட்டாசுகளுக்கு முழு தடை விதிக்கப்பட்டதால் இந்த ஆண்டு சிவகாசி பட்டாசு விற்பனை இலக்கை எட்டியது. இதனால் பட்டாசு உற்பத்தியாளர்களும், விற்பனையாளர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி மற்றும் அதைச் சுற்றி யுள்ள மக்களின் வாழ்வாதாரமாகத் திகழ்வது பட்டாசுத் தொழில். இப் பகுதிகளில் 800-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வரு கின்றன. ஆண்டு முழுவதும் உற்பத்தி நடைபெற்றாலும் பட்டாசுத் தொழிலின் இலக்கு தீபாவளி பண்டிகையே. கடந்த 3 ஆண்டுகளாக சீனாவில் இருந்து அனுமதியின்றி இறக்குமதி செய் யப்பட்ட பட்டாசுகளால் சிவகாசி பட்டாசுத் தொழில் சரிவை சந்தித் தது.
கடந்த ஆண்டு வடமாநிலங் களில் தொடர் மழை, வெள்ளம் காரணமாக சிவகாசி பட்டாசு ஆர்டர் களும், விற்பனையும் குறைந்தன. மேலும் சீன பட்டாசு விற்பனையால் சுமார் 40 சதவீதம் சிவகாசி பட்டாசு விற்பனை சரிந்தது. விற்பனை யாகாத பட்டாசுகள் இருப்பு வைக்கப்பட்டதால் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி வட மாநில வியாபாரிகளிடம் இருந்து ஆர்டர்களும் குறைந்தன. இதனால், சிவகாசியிலும் இந்த ஆண்டு பட்டாசு உற்பத்தி 25 சத வீதம் வரை குறைந்தது.
ஆனால், சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்களின் வேண்டு கோளுக்கு இணங்க மத்திய, மாநில அரசுகளின் கெடுபிடியால் சீன பட்டாசுகள் விற்பனை இந்த ஆண்டு முற்றிலும் தடுத்து நிறுத் தப்பட்டது. இதனால் தீபாவளி பண்டிகையையொட்டி சிவகாசி பட்டாசு விற்பனை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதலானது.
இதுகுறித்து தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தி யாளர்கள் சங்கத் தலைவர் ஆசைத் தம்பி கூறும்போது, “இந்த ஆண்டு விற்பனை மிகச் சிறப்பாக இருந் தது என்று கூற இயலாது. ஆனா லும், கடந்த ஆண்டைப்போல மோசமாக இல்லை. மத்திய, மாநில அரசின் தொடர் நடவடிக்கை களால் சீன பட்டாசு இந்த ஆண்டு எங்கும் விற்கப்படவில்லை. அத னால் சிவகாசி பட்டாசு விற்பனை சராசரியாக இந்த ஆண்டு இருந் தது. வட மாநிலங்களில் கடந்த ஆண்டு விற்காமல் இருப்பு வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் இந்த ஆண்டு விற்றுத் தீர்ந்துள் ளன” என்றார்.
சங்கத்தின் முன்னாள் தலைவர் ஏ.பி.செல்வராஜன் கூறும்போது, “தொடக்கத்தில் பட்டாசு விற்பனை மந்தமாக இருந்தது. ஆனால், தீபாவளி பண்டிகையை ஒட்டிய முதல் 3 நாட்களில் தமிழகத்திலும், வட மாநிலங்களிலும் பட்டாசு விற்பனை நன்றாக இருந்தது. கடந்த ஆண்டு இருப்பில் இருந்த 25 சதவீத பட்டாசுகளும், இந்த ஆண்டு உற்பத்தியான பட்டாசு களும் முழுவதுமாக விற்றுத் தீர்ந்துள்ளன” என்றார்.
சீன பட்டாசு அச்சுறுத்தல் இல்லா ததால் சிவகாசி பட்டாசு விற்பனை இந்த ஆண்டு எதிர்பார்த்த அளவு இருந்தது மட்டுமின்றி, இருப்பில் இருந்தவையும் விற்றுத் தீர்ந்துள்ள தால் பட்டாசு உற்பத்தியாளர் களும், விற்பனையாளர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் அடுத்த ஆண்டுக்கான பட்டாசு உற்பத்தியும், விற்பனையும் சிறப் பாக இருக்கும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
அடுத்த ஆண்டு பட்டாசு உற்பத்தியும், விற்பனையும் சிறப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை உற்பத்தியாளர்களிடையே எழுந்துள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
57 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago